அரசியல்

பிரதமர் மோடி நடத்திய தமாஷ்.. சிவிங்கிப் புலிகளைத் தேசிய பூங்காவிற்குக் கொடுத்தற்குக் காங்கிரஸ் கிண்டல்!

பிரதமர் மோடி தனது பிறந்தநாளை முன்னிட்டு 8 சிவிங்கிப் புலிகளைத் தேசிய பூங்காவிற்குக் கொடுத்தற்குக் காங்கிரஸ் கிண்டல் அடித்துள்ளது.

பிரதமர் மோடி நடத்திய தமாஷ்..  சிவிங்கிப் புலிகளைத் தேசிய பூங்காவிற்குக் கொடுத்தற்குக் காங்கிரஸ் கிண்டல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இவருக்குப் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தனது பிறந்த நாளை முன்னிட்டு 8 சிவிங்கிப் புலிகளை மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்குக் கொடுத்துள்ளார்.

இதையடுத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் 1952ம் ஆண்டு சிவிங்கிப் புலிகள் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு புலிகளைக் கொண்டுவருவதற்காக எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் சிவிங்கிப் புலிகள் திறந்துவிட்டது குறித்து காங்கிரஸ் நிர்வாகி ஜெய்ராம் ரமேஷ் கிண்டல் அடித்து பிரதமர் மோடி நடந்தும் தமாஷ் இது என விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி நடத்திய தமாஷ்..  சிவிங்கிப் புலிகளைத் தேசிய பூங்காவிற்குக் கொடுத்தற்குக் காங்கிரஸ் கிண்டல்!

இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பதிவில், பிரதமர் மோடி இன்று குனோ தேசிய பூங்காவில் நடத்தப்பட்ட தமாஷ் நிகழ்வு. மேலும் ராகுல் காந்தியின் நடைப் பயணத்தின் மீதான கவனத்தைத் திசை திருப்பும் முயேச்சியே என தெரிவித்துள்ளார். இதுபோல் பல காங்கிரஸ் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் பிரதமர் மோடியைக் கிண்டல் அடித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories