அரசியல்

“அஞ்சிவிடுவோம் என மோடியும் - அமித்ஷாவும் நினைக்கிறார்கள்; அது ஒருகாலமும் நடக்காது”: ராகுல் காந்தி அதிரடி!

“சிறிய அழுத்தங்களுக்கு அஞ்சிவிடுவோம் என மோடி மற்றும் அமித்ஷா நினைக்கிறார்கள். அவர் நினைப்பது ஒருகாலமும் நடக்காது.” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

“அஞ்சிவிடுவோம் என மோடியும் - அமித்ஷாவும் நினைக்கிறார்கள்; அது ஒருகாலமும் நடக்காது”: ராகுல் காந்தி அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

1938ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பிரிட்டிஷ் இந்தியாவில் தொடங்கப்பட்ட பத்திரிக்கைதான் நேஷனல் ஹெரால்டு. இந்தப் பத்திரிக்கை அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏ.ஜே.எல்.) என்ற நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டு வந்தது. சுதந்திரப் போராட்ட காலத்தில் மிகச் செல்வாக்கான பத்திரிக்கைகளில் இதுவும் ஒன்று.

நேரு அவர்களின் மிகக்கடுமையான அரசியல் தலையங்கங்கள் காரணமாக 1942ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியால் இப்பத்திரிக்கை தடை செய்யப்பட்டது. மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்தது. சுதந்திர இந்தியாவில் பிரதமர் ஆன நேரு, அந்தப்பத்திரிக்கையின் இயக்குநர் குழுவில் இருந்து தனது பொறுப்பை விட்டு விலகினார். ஆனாலும் காங்கிரசு கட்சியின் நிதியின் மூலமாகத்தான் அது செயல்பட்டது. 2008ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. 2016 முதல் இணையப் பதிப்பாக வெளிவந்தது.

2012 ஆம் ஆண்டு சோனியா, ராகுலுக்கு எதிராக இந்தப் பத்திரிக்கையின் பெயரை சுப்பிரமணியம் சுவாமி பயன்படுத்தினார். இருவரும் காங்கிரஸ் கட்சி நிதியைப் பயன்படுத்தி, ஏ.ஜே.எல். நிறுவனத்தை கைப்பற்றி அதன் 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை அடையும் நோக்கில் செயல்பட்டதாக, சுப்பிரமணிய சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.

“அஞ்சிவிடுவோம் என மோடியும் - அமித்ஷாவும் நினைக்கிறார்கள்; அது ஒருகாலமும் நடக்காது”: ராகுல் காந்தி அதிரடி!

“நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் வெளியீட்டு நிறுவனமான ஏ.ஜே.எல். நிதி நெருக்கடிகளில் சிக்கியபோதும், அதன் வரலாற்றுப் பாரம்பரியம் மீது நம்பிக்கை வைத்திருந்ததால், காங்கிரஸ் அதனை கை விடாமல் இருந்ததாக அக்கட்சி கூறியுள்ளது.

பல்வேறு சமயங்களில் மொத்தமாக காங்கிரஸ் கட்சி ஏ.ஜே.எல். நிறுவனத்திற்கு 90 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. 2010 ஆம் ஆண்டில் ஏ.ஜே.எல். நிறுவனம் கடனில் இருந்து விடுபட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு பங்குகளை ஒதுக்கினோம்” என்கிறது காங்கிரஸ் கட்சி.

இதில் லாப நோக்கம் ஏதுமில்லை என்றும் அக்கட்சி சொல்கிறது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் உரிமையாளர், அச்சு நிறுவனம், வெளியீட்டாளராக ஏ.ஜே.எல். நிறுவனம் தொடர்ந்து இருக்கிறது. அதன் சொத்துக்களில் எவ்வித மாற்றமோ பரிமாற்றமோ இல்லை” என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இவ்வழக்கில் ஜூன் 2014-ம் ஆண்டு ராகுல், சோனியா உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

2015- ஆம் ஆண்டு இவ்வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவருக்கும் முன் பிணை வழங்கப்பட்டது. 2019-ஆம் ஆண்டு நேஷனல் ஹெரால்டுக்குச் சொந்தமான சுமார் 16 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை பறிமுதல் செய்ததாக அறிவிக்கப்பட்டது. 2014 முதல் 7 ஆண்டுகளாக இவ்வழக்கில் பெரிதும் எந்த முன்னேற்றமும் இல்லை.

“அஞ்சிவிடுவோம் என மோடியும் - அமித்ஷாவும் நினைக்கிறார்கள்; அது ஒருகாலமும் நடக்காது”: ராகுல் காந்தி அதிரடி!

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பவன் குமார் பன்சால் ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் நேஷனல் ஹெரால்டு அலுவலக வளாகத்தில் உள்ள யங் இந்தியா ஹவுஸ் அலுவலக பகுதியை அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டத்திற்கு செல்லும் போது பத்திரிக்கையாளர் இதுகுறித்து ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பினர்.

அப்போது பேசிய ராகுல் காந்தி எம்.பி “சிறிய அழுத்தங்களுக்கு அஞ்சிவிடுவோம் என மோடி மற்றும் அமித்ஷா நினைக்கிறார்கள். அவர் நினைப்பது ஒருகாலமும் நடக்காது. மோடியும் அமித்ஷாவின் நமது ஜனநாயகத்திற்கு எதிராக என்ன செய்தாலும் அதனை நாங்கள் எதிர்ப்போம்.

நாங்கள் எங்கும் ஓடி ஒழிய மாட்டோம். நாங்கள் எதற்கும் அஞ்சவில்லை.மோடியைப் பார்த்து எங்களுக்குப் பயமில்லை. என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நான் எனது கடமையைச் செய்வேன். ஜனநாயகத்தை காக்க செயல்படுவேன். நாட்டில் ஒற்றுமையை நிலைநிறுத்த செயல்படுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories