அரசியல்

ஜெ.,மரணம்: 75 நாளும் அப்போலோவில் இருந்த இளவரசி விசாரணை கமிஷனில் அளித்த வாக்குமூலத்தால் பரபரப்பு!

75 நாட்களும் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில் சசிகலா அண்ணன் மனைவி இளவரசி ஆறுமுக சாமி ஆணையத்தில் பரபரப்பு வாக்குமூலம்.

ஜெ.,மரணம்: 75 நாளும் அப்போலோவில் இருந்த இளவரசி விசாரணை கமிஷனில் அளித்த வாக்குமூலத்தால் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

”அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது அவரை ஓரிரு முறை மட்டுமே நேரில் பார்த்திருக்கிறேன். அதுவும் கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்திருக்கிறேன்” என 75 நாட்களும் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளவரசி அளித்த வாக்குமூலத்தின் விவரம் வருமாறு:-

”சசிகலா மூலமாக கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடன் அறிமுகம் ஏற்பட்டது.

போயஸ் தோட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடன் தங்கி இருந்தாலும், என்னிடம் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து எதுவும் பகிர்ந்தது இல்லை. ஆனால் வீடு, குடும்பம் தொடர்பாக மட்டும் பேசுவார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடன் சிறைக்கு சென்றேன். அப்போது அவர் உடல் நல குறைவாகவும் மிகுந்த மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்டு இருந்தார்.

2016ம் ஆண்டு தேர்தலின் போதும் ஜெயலலிதா உடல் நலகுறைவாகவே இருந்தார். பின்னர் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது சசிகலா மட்டுமே உடன் இருந்து பார்த்துக்கொண்டார்.

நான் தினமும் சென்று பார்த்து வருவேன். 75 நாளில் ஓரிரு முறை மட்டுமே ஜெயலலிதாவை பார்த்திருக்கிறேன். அதுவும் கண்ணாடி வழியாக தான் பார்த்திருக்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories