அரசியல்

100ல் 86ல் டெபாசிட் காலி” ஒற்றுமையை சீர்குலைக்க தனிநாடு கேட்ட பாஜகவை தண்ணீ தெளிச்சு அனுப்பிய கோவை மக்கள்!

கோவை மாநகராட்சியை கைப்பற்றுவோம் என வாய்ப்பந்தல் போட்டு வந்த பாஜகவினர் 100 வார்டுகளில் ஒன்றில் கூட ஜெயிக்கவில்லை.

100ல் 86ல் டெபாசிட் காலி” ஒற்றுமையை சீர்குலைக்க தனிநாடு கேட்ட பாஜகவை தண்ணீ தெளிச்சு அனுப்பிய கோவை மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற, சட்டமன்ற, ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை தொடர்ந்து தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணி கட்சிகளும் அமோக வெற்றியை தனதாக்கியிருக்கிறது.

இப்படி இருக்கையில், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகளாக இருக்கக் கூடிய அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்டவை அவரவர்களின் சொந்த தொகுதியிலேயே முகவரி அற்றுப்போய் கிடக்கும் நிலையும் உண்டாகியுள்ளது.

குறிப்பாக கொங்கு மண்டலம் தங்களது கோட்டை எனக் கொக்கரித்து வந்த அதிமுகவுக்கு தரமான பதிலடியை கொடுக்கும் வகையில் கோவை மக்கள் திமுகவை ஆதரித்து வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள்.

100ல் 86ல் டெபாசிட் காலி” ஒற்றுமையை சீர்குலைக்க தனிநாடு கேட்ட பாஜகவை தண்ணீ தெளிச்சு அனுப்பிய கோவை மக்கள்!

அதேபோல அதிமுகவின் ஆதரவை பெற்றிருந்த பாஜக நாடாளுமன்ற தேர்தலின் போது தெற்கு தொகுதியில் வென்றுவிட்டதால் தமிழ்நாடே எங்களதுதான் என்ற பாணியில் சுற்றித் திரிந்தவர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தக்க பாடத்தை கற்பித்திருக்கிறார்கள்.

அதன்படி கோவை மாநகராட்சியின் உள்ள 100 வார்டுகளில் 86 இடங்களிலும் டெபாசிட்டை இழந்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. மற்ற இடங்களில் ஒற்றை இலக்கத்திலும் சில இடங்களில் ஒரேயொரு இலக்கையே பெற்று அவர்களுக்கே உரிய வரலாற்று பெற்றிருக்கிறது.

இதனையடுத்து கொஞ்சம் நஞ்சம் இருந்த ஓட்டு எண்ணிக்கையும் நடந்து முடிந்த தேர்தல் மூலம் புஸ்வானம் ஆகியிருக்கிறது என்றும், கொங்கு மண்டலத்தை தனிநாடாக்க வேண்டும் எனக் கேட்ட பாஜக உள்ளிட்ட சங்கிகளுக்கு எங்களுக்கு தமிழ்நாடுதான் முக்கியம் என தங்களின் வாக்குகளின் மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள் என சமூக வலைதளங்களில் பதிவுகள் இடப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories