அரசியல்

“Mark my words.. போரட்டம் குறித்து அன்றே சொன்ன ராகுல்காந்தி” : இன்று விவசாயிகளிடம் அடிபணிந்த மோடி அரசு!

தமிழ்நாடு வந்திருந்த கங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்படும் என தெரிவித்தார்.

“Mark my words.. போரட்டம் குறித்து அன்றே சொன்ன ராகுல்காந்தி” : இன்று விவசாயிகளிடம் அடிபணிந்த மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்த கருப்பு வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையான சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் பகுதியில் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் தங்கள் போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தனர்,

கடந்த நம்பவர் 6ம் தேதி துவங்கிய விவசாயிகளின் போராட்டம் ஓராண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இந்திய வரலாற்றில் இப்படி ஒரு நீண்ட போராட்டம் நடந்தது இல்லை என வரலாற்று அறிஞர்கள் கூறிவந்தனர்.

அந்த அளவுக்கு தங்களின் நியாயமான கோரிக்கையை நம்பிக்கையுடன் விவசாயிகள் போராடி வந்தனர். டிரக்டர் பேரணி, சாலை மறியல் என பல கட்ட போராட்டங்களை நடத்தியும் இவர்களின் நியாயமான கோரிக்கையை தொடர்ந்து ஒன்றிய அரசு புறக்கணித்து வந்தது.

மோடி அரசின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த 4 சட்டமன்றத் தேர்தலில் பலத்த அடி வாங்கியது மோடி அரசு. அதன் தொடர்ச்சியாக இன்று காலை காணொலி காட்சி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லி எல்லைப் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் தங்கள் இல்லங்களுக்கு திரும்ப வேண்டுகோள் விடுக்கிறேன் என கோரிக்கை வைத்துள்ளார்.

முன்னதாக தமிழ்நாடு வந்திருந்த கங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்படும் என தெரிவித்தார். அதேபோல் மோடி அரசாங்கம் தற்போது வேளாண் சட்டங்களை வாப்ஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கடந்த ஜனவரி 14ஆம் தேதி அன்று ராகுல் காந்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த போராட்டத்திற்கு எனது முழு ஆதரவை அளிக்கிறேன். விவசாயிகளுக்கான நான் எப்போதும் உறுதுணையாக நிற்பேன். இதுபற்றி பஞ்சாபில் யாத்திரை மேற்கொள்ளும் எடுத்துரைத்தேன்.

இதனை நாங்கள் தொடர்ந்து செய்வோம். எனது வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்படும். நான் சொன்னதை மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

banner

Related Stories

Related Stories