அரசியல்

வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார்: வழக்கின் நிலை என்ன? ஐகோர்ட்டின் புதிய ஆணை என்ன? விவரம் இதோ!

வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் 10 வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார்: வழக்கின் நிலை என்ன? ஐகோர்ட்டின் புதிய ஆணை என்ன? விவரம் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் 10 வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்திருந்த வழக்கில், உள்ளாட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி கை காட்டும் நபர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சரின் சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளின் நிறுவனங்களுக்கு பல கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இதேபோல் அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில், 2018 செப்டம்பர் 12ஆம் தேதியன்று சிபிஐ மற்றும் தமிழக லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்ததில், 2014 ஜூன் முதல் 2015 நவம்பர் வரை கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சுற்று சுவர் அமைத்தல், குடிநீர் குழாய் பதித்தல் உள்ளிடவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால்,. மேற்கொண்டு இந்த விவகாரத்தை நிலுவையில் வைக்காமல் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக தொடர்ந்த வழக்குகளை முடித்துவைக்கலாம் என தெரிவித்தார்.

அறப்போர் இயக்கம் தரப்பில் வேலுமணி மீது வழக்குப்பதிவது மட்டும் கோரிக்கை அல்ல என்றும், உடந்தையாக இருந்தவர்கள், பலனடைந்தவர்கள் ஆகியோரை வழக்கில் சேர்க்கும் வகையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் எனவும், மேற்கொண்டு நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என தெரிவித்தார். திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விட்டதால், தங்கள் வழக்கை முடித்து வைக்கலாம் என தெரிவித்தார். இந்த வழக்குகள் இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர.சண்முகசுந்தரம், வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.,தொடர்புடைய அதிகாரிகள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை கேட்கிறார்கள், கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ்,ஏற்கனவே கடந்த ஆட்சியில் வழக்கை முடித்துவைத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்திருந்தோம், ஏற்கனவே இரண்டு மத்திய தணிக்கை துறை அறிக்கைகள் எதிராக உள்ளது, எனவே அவருக்கு கடந்த ஆட்சியில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை தரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள்,

விசாரணையை முடிந்து பத்து வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். முந்தைய ஆட்சியில் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை வழக்கில் சேர்த்தால், கீழமை நீதிமன்றத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார்.

banner

Related Stories

Related Stories