அரசியல்

முல்லை பெரியாறு: "இல்லாத பிரச்னையை உருவாக்க முயலும் அ.தி.மு.க" - தயாநிதிமாறன் எம்.பி. குற்றச்சாட்டு!

அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை இருப்பதால், முல்லைப் பெரியாறு விஷயத்தில் இல்லாத பிரச்சினையை உருவாக்குகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் சாடியுள்ளார்.

முல்லை பெரியாறு: "இல்லாத பிரச்னையை உருவாக்க முயலும் அ.தி.மு.க" - தயாநிதிமாறன் எம்.பி. குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 15,000 பொது மக்களுக்கு தீப ஒளி பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் பங்கேற்று தொகுதி மக்களுக்கு பட்டாசுகள், இனிப்புகள், நிதியுதவியை வழங்கினர்.

அப்போது இதை அறிந்த அங்கு வந்த நரிக்குறவர் இன மக்களுக்கும் 100 பேர், புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள், ரூபாய் ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. நலத்திட்டங்களை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு மற்றும் எம்.பி தயாநிதி மாறனுக்கு நரிக்குறவ மக்கள் பாசி மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கூறியதாவது,

எங்கள் பகுதி மக்கள் தீப ஒளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் 15 ஆயிரம் குடும்பங்களுக்கு அமைச்சர் சேகர்பாபு அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் துணிகளும், பட்டாசுகளும், இனிப்புகளும் வழங்கியுள்ளோம்.

இந்தப் பகுதியில் உள்ள நரிக்குறவர் இனத்தை சேர்ந்த மக்கள், தீப ஒளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதே அறிந்து தன்னிச்சையாக வந்திருந்தனர். உடனே அவர்கள், ஒவ்வொருக்கும் ரூபாய் 1000 மற்றும் புதிய துணிமணிகள், பட்டாசுகள், இனிப்புகள் வழங்கினோம், இதுபோன்ற எங்கள் பணி தொடர்ந்து நடக்கும்.

அ.தி.மு.க உட்கட்சி பிரச்சினைகளில் யார் தலைவர்கள் என்று போட்டி இருப்பதால், முல்லை பெரியாறு சம்பந்தமாக இல்லாத பிரச்சினையை அ.தி.மு.க உருவாக்கி வருகிறார்கள். அமைச்சர் துரைமுருகன் இது குறித்து தெளிவான விளக்கத்தை தெரிவித்தும் அ.தி.மு.க உட்கட்சி பிரச்சனையில் இதை செய்து வருகிறார்கள் என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories