அரசியல்

”பாஜகவிடம் இருந்து மக்களை காப்பாற்றுங்கள்” - காங்., MLA உச்ச நீதிமன்றத்துக்கும் ஜனாதிபதிக்கும் கோரிக்கை!

பாஜகவிற்கு எதிரான மவுன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

”பாஜகவிடம் இருந்து மக்களை காப்பாற்றுங்கள்” - காங்., MLA உச்ச நீதிமன்றத்துக்கும் ஜனாதிபதிக்கும் கோரிக்கை!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விவசாயிகள் மீது படுகொலை செய்ததைக் கண்டித்து ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி விலகக் கோரியும் இந்த படுகொலை குறித்து உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வலியுறுத்தி வடசன்னை காங்கிரஸ் கமிட்டி சார்பில் மவுன போராட்டம் நடைபெற்றது.

வடசென்னை காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரவியம் தலைமையில் சென்னை தண்டையார்பேட்டை தபால் நிலையம் அருகே நடைபெற்ற, மௌன போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒழுங்கு நடவடிக்கை குழு மாநில தலைவர் உ. பலராமன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வம் பெருந்தகை, உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் 1000க்கும் மேற்பட்டவர்கள் மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை, உத்திர பிரதேச மாநிலத்தில் 3 விவசாயிகள் கொல்லப்பட்டதை காங்கிரஸ் கட்சி வண்மையாக கண்டிக்கிறது. மேலும் பாஜகவிற்கு எதிராக நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழு அமைத்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். மேலும் பாஜக இந்த சம்பவத்திற்கு ஆதாரம் இல்லை எனவே கூறுகிறது. தற்போது பாஜக இணை அமைச்சரின் மகன் இந்த சம்பவம் தொடர்பாக சரண்டைந்துள்ளார். அவரிடம் சரியான பாதையில் விசாரணை நடக்கவில்லை. இந்த பிரச்சனை தொடர்பாக ராகுல் காந்தி ஜனாதிபதியை சந்திக்க உள்ளார்.

பாஜகவிடம் இருந்து மக்களை காப்பாற்ற உச்ச நீதிமன்றமும், ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நேற்று முளைத்த காளானாக இருக்கும் கட்சியை வைத்து சீமான் காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்ததை கண்டிக்கிறோம். மேலும் சீமான் காந்தியை விட பெரியவர் போலவும், அம்பேத்கரை போல பெரியவர் எனவும், தன்னைத்தானே புத்திசாலி என நினைத்து கொண்டு காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்து வருகிறார்.

சீமானுக்கு யாரை பற்றி பேசுகிறோம் என தெரிந்து நாவடக்கத்துடன் பேச வேண்டும். சிறுபான்மையினரை பிடிக்காது, தலித்துகளை பிடிக்காது, காங்கிரஸ் கட்சியை பிடிக்காது என புத்திசுவாதினம் இல்லாமல் பேசி வருகிறார்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை பற்றி விமர்சித்தால் ஏற்கனவே நடந்த போராட்டங்களை போல ஆர்ப்பாட்டங்களை நாங்களே முன்னெடுத்து நடத்துவோம் என அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories