அரசியல்

கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல்; முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது மோசடி புகார்

முன்னாள் அதிமுக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார்.

கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல்; முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது மோசடி புகார்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது குவியும் தொடர் மோசடி புகார்கள். அரசு வேலை மற்றும் டெண்டர் வழங்குவதில் பல கோடிக்கணக்கில் மோசடி. கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுவதாக புகார்தாரர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சம்.

முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் அவரது உதவியாளர்கள் டெண்டர் பெற்றுத் தருவதாக கூறி பல கோடி ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதுடன் பணத்தை திருப்பிக் கேட்டால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட ஒப்பந்ததாரர் ஒருவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்தவர் திருவேங்கடம். கட்டிட ஒப்பந்ததாரன இவர் கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு ஒப்பந்தங்கள் பெற்று அதன் மூலம் கட்டுமான பணிகளை செய்து வந்து உள்ளார். இந்த நிலையில் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியிடம் ஒப்பந்தம் ஒன்றை கோரியிருந்தார். இதற்காக கமிஷன் தொகை ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் பணத்தை அமைச்சரின் உதவியாளர் பார்த்திபன் மற்றும் வினோத் ஆகியோரை சந்தித்து ஒப்பந்தம் தொடர்பாக பணம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஒப்பந்தம் தனக்கு கிடைக்கவில்லை என்பதை அறிந்த திருவேங்கடம் தான் செலுத்திய கமிஷன் முன் தொகையை அமைச்சர் மற்றும் அவரது உதவியாளரிடம் திரும்பக் கேட்டுள்ளார். ஆனால் திருவேங்கடத்துக்கு பணம் திரும்ப வராததால் பலமுறை அமைச்சரையும் அவரது உதவியாளர்களையும் தொடர்பு கொண்டபோது அவர்கள் தொடர்ந்து அவரை அலைக்கழித்து வந்துள்ளனர்.

கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல்; முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது மோசடி புகார்

ஒரு கட்டத்தில் பணத்தை திரும்ப தர முடியாது என்றும் பணத்தை கேட்டு வற்புறுத்தினால் குடும்பத்துடன் கொலை செய்துவிடுவேன் என்றும் அமைச்சரின் உதவியாளர்கள் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான திருவேங்கடம் தனது பணத்தை திரும்பப் பெற்று தர வலியுறுத்தியும் தன்னையும் தனது குடும்பத்தையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டும் அமைச்சரின் உதவியாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து தனக்கு தக்க பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி சென்னை மாநகர காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

இந்த மோசடி புகாருக்கான அதிருப்தி அடங்குவதற்குள் முன்னாள் அதிமுக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீதும் அவரது அலுவலக உதவியாளர் மீதும் மோசடி தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் தலைமைச் செயலகத்தில் தற்காலிக அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு கால்நடை துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு அறிவித்தார்கள். இந்த அறிவிப்பை அடுத்து அமைச்சரின் முக்கிய பினாமியாக இருக்கக்கூடிய ரமேஷ் என்பவரை தொடர்பு கொண்டு கிட்டத்தட்ட 1.5 கோடி ரூபாயை கொடுத்துள்ளார் .

மேலும் கால்நடை துறையில் அலுவலக உதவியாளர் 6 பேர் பணிக்கு வேண்டும் என ரமேஷ் அவர்களை தொடர்பு கொண்டு பணத்தை வழங்கி இருக்கிறார். அதன் பிறகு கொரோனா தொற்று காரணமாக நாட்கள் கடந்து ஓடின. அதுமட்டுமின்றி அரசு பணிகளில் உள்ள காலி இடங்களுக்கு ஊழியர்களை நிரப்பும் பணிக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. தொடர்ச்சியாக கால்நடைத்துறையில் பணிக்கு வைக்காமல் அலைக்கழித்து வந்தார்கள்.

இந்த நிலையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஒரு கட்டத்தில் பணத்தை திருப்பி கேட்ட போது ரமேஷ் என்பவர் ஆட்களை வைத்து மிரட்டி வந்தார்கள். அலுவலக உதவியாளர் பணிக்கு 5 லட்சம் ரூபாயும் லேபர் இன்ஸ்பெக்டர் பணிக்கு 7 லட்சம் ரூபாயும் அமைச்சரின் உதவியாளர் வாங்கி இருக்கிறார்கள். ஏற்கெனவே பல பேருக்கு பணியிட மாற்றம் போன்றவற்றை செய்வதற்காக 3 முதல் 4 லட்சம் ரூபாய் வரை வாங்கி கொண்டு ரமேஷ் என்பவர் செய்து வந்துள்ளார். ஆகவே தான் தேவேந்திரன் மூலமாக அனைவரும் ரமே ஷை நம்பி பணத்தை கொடுத்துள்ளனர்.

ஆனால் ஒரு கட்டத்தில் பணம் வராத காரணத்தினால் தொடர்ந்து அமைச்சரிடம் முறையிட்ட போது நீங்கள் யாரிடம் பணத்தை கொடுத்துள்ளீர்களோ அவரிடம் கேட்கும்படி அமைச்சர் அலைகழித்து வந்துள்ளார். மேலும் ரமேஷ் ஆட்களை வைத்து தொடர்ச்சியாக கொலை மிரட்டல் கொடுப்பது மட்டுமல்லாமல் வீட்டிற்கே அடியாட்களை அனுப்பி எங்களை தொந்தரவு செயலின் காரணத்தால் தேவேந்திரன் வேறு வழியில்லாமல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்பி இந்த புகார் மனுவை அளித்ததாகவும் தெய்வேந்திரன் தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி பல கோடிக்கணக்கில் மோசடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories