அரசியல்

”முன்னாள் காக்கி; இந்நாள் சங்கி அண்ணாமலை” - புகைச்சலை வெளிப்படுத்திய திருப்பூர் பாஜக தலைவர்?

”முன்னாள் காக்கி; இந்நாள் சங்கி அண்ணாமலை” - புகைச்சலை வெளிப்படுத்திய திருப்பூர் பாஜக தலைவர்?
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன்னை பா.ஜ.கவின் இணைத்துக் கொண்டார். அதன் பிறகு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டவர் தோல்வியை தழுவிய அவர் தற்போது தமிழ்நாடு பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கட்சியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அண்மைக்காலமாக கட்சியின் புதிதாக சேரும் ரவுடிகள், பிரபலங்களுக்கு பல்வேறு முக்கிய பதவிகளை பாஜக தலைமை வழங்கி வருகிறது. இது மூத்த நிர்வாகிகளிடையே சற்று புகைச்சலையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இப்படி இருக்கையில் ஜூலை 16ம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவராக பதவியேற்கவிருக்கும் அண்ணாமலைக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் அண்ணாமலையை வரவேற்று திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் பேசியது சர்ச்சையையும் கட்சியினரிடையே குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

செந்தில்வேல் பேசியதாவது, “அமித்ஷா பெரிய சங்கி என்றால், அண்ணாமலை சிறிய சங்கியாவார். முன்னாள் காக்கியும் இந்நாள் சங்கியுமான அண்ணாமலையை வரவேற்பதில் மகிழ்ச்சி.” எனக் கூறியுள்ளார்.

அவர் அடுக்கடுக்காக பேசியது நகைச்சுவையாக இருந்தாலும் கட்சியினரிடையே சற்று அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories