அரசியல்

“முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது” - சென்னை ஐகோர்ட்டில் காவல்துறை எதிர்ப்பு!

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியுள்ளதால் முன் ஜாமீன் வழங்க கூடாது என காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

“முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது” - சென்னை ஐகோர்ட்டில் காவல்துறை எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாகவும், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவருக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என நடிகை சாந்தினி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜூன் 9ஆம் தேதி வரை மணிகண்டனை கைது செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. முன்னாள் அமைச்சரின் முன் ஜாமீன் மனு, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 2017ல் பரணி என்பவர் மூலம் மணிகண்டனுக்கு நடிகை அறிமுகம் ஆகியுள்ளார். நடிகை சாந்தினி, மலேஷியாவின் தென் மாநில தூதராக உள்ளார். மலேஷியாவில் முதலீடு தொடர்பாக சந்தித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஏமாற்றியுள்ளார். கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்துள்ளார். உதைத்ததால் படுகாயமடைந்துள்ளார். விசாரானை ஆரம்ப நிலையில் உள்ளது. ஆதாரங்கள் சேகரிக்கப்லட்டு வருகிறது.

சாந்தினி மற்றும் மருத்துவர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது... மூன்று முறை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது... முக்கிய சாட்சிகள் விசாரிக்க வேண்டியுள்ளது... ஆதாரங்கள் சேகரிக்க வேண்டியுள்ளது... முக்கிய பதவியை வகித்ததால் சாட்சிகளை கலைக்க கூடும்... என வாதிடப்பட்டது.

சாந்தினி தரப்பில், திருமணம் செய்து கொள்வதாக தோற்றத்தை ஏற்படுத்தியதால் உறவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக அளித்த வாக்குறுதியை மீறினால், உறவுக்கு அளித்த ஒப்புதலை ஒப்புதலாக கருத வேண்டாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முதலில் சாந்தினி யார் என தெரியாது என கூறியவர், பிறகு சந்தித்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

banner

Related Stories

Related Stories