அரசியல்

"நோட்டாவை விட மிகக்குறைவான வாக்குகள்” : தே.மு.தி.க-வை படுபாதாளத்திற்கு அழைத்துச் சென்ற பிரேமலதா!

60 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க ஒட்டுமொத்தமாக தே.மு.தி.க 0.43 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது.

"நோட்டாவை விட மிகக்குறைவான வாக்குகள்” : தே.மு.தி.க-வை படுபாதாளத்திற்கு அழைத்துச் சென்ற பிரேமலதா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இத்தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க அணிகள் தவிர்த்து, அ.ம.மு.க - தே.மு.தி.க கூட்டணி, மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஒரு கூட்டணி, நாம் தமிழர் கட்சி என ஐந்து முனை போட்டி நிலவியது.

அ.தி.மு.க கூட்டணியில் இருந்த தே.மு.தி.க தொகுதி உடன்பாட்டு பிரச்னையால் அக்கூட்டணியிலிருந்து அதிருப்தியுடன் விலகியது. பின்னர், அ.ம.மு.கவுடன் கூட்டணி அமைத்து 60 தொகுதிகளில் போட்டியிட்டது.

தேர்தல் முடிவுகளின்படி, தி.மு.க கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. அ.ம.மு.க, தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், நா.த.க ஆகிய கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், குறைவான வாக்குகளையே பெற்று டெபாஸிட் இழந்து படுதோல்வியடைந்தார். தே.மு.தி.கவின் அத்தனை வேட்பாளர்களும் டெபாஸிட் இழந்துள்ளனர்.

தேர்தல் ஆணைய தகவல்களின்படி 60 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க ஒட்டுமொத்தமாக தே.மு.தி.க 0.43 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக நோட்டாவுக்கு 0.75% வாக்குகள் கிடைத்துள்ளன. அதன்படி நோட்டாவை விட குறைவான வாக்குகளையே தே.மு.தி.க பெற்றுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, தே.மு.தி.க இல்லாமல் தமிழகத்தில் எந்தக் கட்சியும் ஆட்சியை பிடிக்க முடியாது என பிரேமலதா விஜயகாந்த் சவால் விடுத்த நிலையில், நோட்டாவை விட குறைவான வாக்குகளைப் பெற்று படுதோல்வியைச் சந்தித்துள்ளது அக்கட்சி.

ஒருகாலத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சியாகத் திகழ்ந்த தே.மு.தி.க இன்று நோட்டாவை விட குறைவான வாக்கு சதவீதம் பெற்று படுதோல்வி அடைந்திருப்பது தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories