அரசியல்

“ஊழல் மன்னன் வேலுமணிக்கு இந்தத் தேர்தலில் சாவுமணி” : கூட்டணிக் கட்சி தலைவரே கொடுத்த சர்டிபிகேட்!

தான் பார்த்தவர்களிலேயே அமைச்சர் வேலுமணி கர்வம் மிகுந்தவர் என த.மா.கா துணைத் தலைவர் கோவை தங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.

“ஊழல் மன்னன் வேலுமணிக்கு இந்தத் தேர்தலில் சாவுமணி” : கூட்டணிக் கட்சி தலைவரே கொடுத்த சர்டிபிகேட்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தொண்டாமுத்தூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளரும், அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி ஆணவம் நிறைந்தவர் என அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் த.மா.கா-வின் துணைத் தலைவர் கோவை தங்கம் விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியை, த.மா.கா தங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தது. அங்கு ஏற்கனவே எம்.எல்.ஏ-வாக இருந்த கோவை தங்கம் போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். ஆனால், வால்பாறை தொகுதி த.மா.கா-வுக்கு ஒதுக்கப்படவில்லை.

இதையடுத்து, கோவை தங்கம் சுயேட்சையாக போட்டியிட முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. வால்பாறை தொகுதி தங்களுக்கு ஒதுக்கப்படாததற்கு அமைச்சர் வேலுமணியே காரணம் என கோவை தங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்துப் பேசியுள்ள கோவை தங்கம், “இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமாறு என்னிடம் கூறினார் வேலுமணி. எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து எங்கள் தலைவர் முடிவெடுப்பார் என்று கூறினேன். அதை மனதில் வைத்துக்கொண்டு வன்மத்தோடு செயல்படுகிறார் வேலுமணி.

இதற்கு முன்பு நான் பல அமைச்சர்களுடன் பழகியுள்ளேன். ஆனால், என்னுடைய 55 ஆண்டுகால பொதுவாழ்வில் கர்வம், ஆணவம் நிறைந்த அமைச்சராக வேலுமணியை பார்க்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க அமைச்சர்களின் செயல்பாடுகளால் கூட்டணிக் கட்சியினர் கடுமையான அதிருப்தியில் இருப்பதால், அ.தி.மு.க தொண்டர்கள் தேர்தல் முடிவு குறித்த பீதியில் உறைந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories