அரசியல்

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் தேதிகளை அறிவித்தார் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வரும் மே மாதம் 24-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மாலை 4.30 மணிக்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

தமிழகம் தவிர புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில், தமிழகத்தில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகின்ற மே 24ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது.

5 மாநிலங்களிலும் 824 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறும்.

கொரோனா காலம் என்பதால் வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1 வாக்குச்சாவடியில் 1,000 வாக்காளர்கள் வாக்களிக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டும்.

அதேப்போல், 80 வயதுக்கு மேற்பட்டர்களுக்கு தபால் வாக்கு கட்டாயம் அல்ல, விருப்பப்பட்டால் மட்டும் வாக்களிக்கலாம். ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு நேர அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

வேட்புமனு தாக்கலுக்கு வேட்பாளரோடு இருவருக்கு மட்டும் அனுமதி; மேலும், 2 வாகனங்களில் மட்டும் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேப்போல், ஒரு வேட்பாளருடன் 5 நபர்கள் மட்டுமே வாக்கு சேகரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் 5 பேருக்கு மேல் ஒன்றாக சேர்ந்து சென்று வீடுகளில் வாக்கு சேகரிக்ககூடாது.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

தமிழகம் முழுவதும் 88,936 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் மத்திய பாதுகாப்பு படைகள் பணியில் அமர்த்தப்படும்.

தமிழகத்துக்கு செலவினப் பார்வையாளர்களாக மது மகாஜன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் நியமனம்.

புதுச்சேரியில் தொகுதிக்கு 22 லட்சம், மற்ற மாநிலங்களில் தொகுதிகளில் 30.8 லட்சம் செலவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். அசாமில், மார்ச் 2ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும்.

கேரளா 14 மாவட்டங்களிலும் ஒரே கட்ட தேர்தல். ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடக்கும்.

புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

மேற்குவங்க மாநிலத்தில் 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை மார்ச் 12ஆம் தேதி முதல் தாக்கல் செய்யலாம். மேலும், 5 மாநிலங்களிலும் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

banner

Related Stories

Related Stories