அரசியல்

“தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக வரம்பு மீறி பேசி வாங்கிக்கட்டிக் கொள்ளாதீர்” - பழனிசாமிக்கு எச்சரிக்கை!

ஒரே ஒரு ஊழலைச் சொன்னவுடன் உடம்பெல்லாம் ஏன் பழனிச்சாமிக்கு இப்படி ஆட்டம் காண்கிறது என தி.மு.க. இலக்கிய அணி இணைச் செயலாளர் வி.பி.கலைராஜன் விமர்சித்துள்ளார்.

“தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக வரம்பு மீறி பேசி வாங்கிக்கட்டிக் கொள்ளாதீர்” - பழனிசாமிக்கு எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

“ஒரு ஸ்டாலினின் செயலைப் பார்த்த பயத்தில் உளறுகிற உங்களுக்கு ஓராயிரம் ஸ்டாலினா வேண்டும்?” என எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பியுள்ளார் தி.மு.க. இலக்கிய அணி இணைச் செயலாளர் வி.பி.கலைராஜன்.

இது தொடர்பாக முரசொலியில் வெளியாகியுள்ள செய்தியின் விவரம் பின்வருமாறு:

தேர்தல் பயத்தில் பழனிச்சாமி தாங்கள் வகுத்துள்ள வியூகங்களெல்லாம் கழகத் தலைவர் தளபதியால் தகர்த்தெறியப்பட்டு தவிடு பொடி ஆக்கப்படுகிறது என்ற ஆத்திரத்தில் உச்சக்கட்ட விரக்தியின் விளிம்பிற்கே சென்று உளறத் தொடங்கிவிட்டார். தமிழகத்தில் தளபுதியின் அன்பு கட்டளைப்படி மக்கள் கிராம சபைக் கூட்டம், கிட்டத்தட்ட ஒன்றே கால் கோடி மக்கள் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். போதாதா? நாம் அரசு இயந்திரங்கள் அனைத்தையும் முடக்கிவிட்டு, கோடான கோடி மக்களிடமிருந்து மிகுந்த வரவேற்பு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் வாட்டி எடுக்க மன அழுத்தத்திற்கு ஆளாகி, விட்டேனா பார்! தி.மு.க. தலைவர் ஸ்டாலினை! என்று கடுங்கோபத்தில் வெறிகொண்டவன் வீட்டுச் சுவற்றில் முட்டிக் கொள்வதைப் போல் ஒன்றுக்கும் உதவாதவன் கண்ணாடியால் கைகளில் கிழித்துக் கொள்வதுபோல் காட்டுக் கத்தலாக உடல் இரத்த அழுத்தம் ஏறியவராய் நடக்கப் போகாத விஷயத்தையெல்லாம் கக்கிக் கதறியுள்ளார்.

இவரது பேச்சைக் கேட்டு மக்கள் நக்கலாய் பார்ப்பது இந்த சாரைப் பாம்புக்கு எங்கே தெரியப்போகிறது? சத்தமாம் சத்தம்! யாரைப் பார்த்து? எங்களிடமே உங்களின் சண்டியர் தனமா? இதற்கெல்லாம் எங்கள் சிலந்தி மிகத் தெளிவாக பதில் தந்து விட்டார். பத்திரிக்கை படிப்பவராக இருந்தால் சிலந்தியின் சீற்றத்தை படித்துப் பார்த்து அடங்கிப் போயிருப்பார். எங்கள் சிலந்தியின் சீற்றமே உம்மை எரித்துவிடும். அப்படி இருக்க சிலந்தி சிங்கமானால் அதன் கர்ஜனைக்கு இந்த முற்றும் அறிந்தவராக காட்டிக் கொள்ளும் பழனிச்சாமி காணாமலே போய்விடுவார். என்ன ஆச்சு பழனிச்சாமி? உங்களுக்கு இத்தகைய திடீர் குமுறலும் குதறலும்? இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி தொலைக்காட்சிகளில் வந்தது. அதாவது ஒரு இளைஞன் சாலையில் செல்வோர் வருவோரையெல்லாம் தனது பல்லால் பாய்ந்து பாய்ந்து கடித்துள்ளான். கடைசியில் பொது மக்கள் அடித்து அவனை காவல் நிலையத்திற்குள் தள்ளினர்.

பழனிச்சாமியின் இந்த பதற்றம் பார்க்கையில், அந்த இளைஞன்தான் என் மன கண் முன்னால் வந்தான். பாவம் அவனோ உடம்பில் சட்டை அணியாத பைத்தியக்காரன், இந்த பழனிசாமியோ பச்சைத் துண்டோடு பல்லிளித்து வரும் பாசாங்குகாரர். இருவருக்கும் வித்தியாசம் எதுவுமில்லை. ஒரு ஸ்டாலினின் செயலைப் பார்த்த பயத்தில் உளறுகிற உங்களுக்கு ஓராயிரம் ஸ்டாலினா வேண்டும்? ஒரே ஒரு ஊழலைச் சொன்னவுடன் உடம்பெல்லாம் ஏன் பழனிச்சாமிக்கு இப்படி ஆட்டம் காண்கிறது. பயத்தில் இருட்டில் தனியாகப் போகிறவன் எதையாவது புலம்பிக் கொண்டே செல்வானாம், அதைப் போல் பழனிச்சாமி பகலிலேயே புலம்பிடத் தொடங்கி விட்டார். பதிலுக்கு பதில் வார்த்தைப் போர் எங்களுக்கும். நடத்தத் தெரியும். எகிறாதீர்! இது சவடால் அல்ல; சவால்!

“தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக வரம்பு மீறி பேசி வாங்கிக்கட்டிக் கொள்ளாதீர்” - பழனிசாமிக்கு எச்சரிக்கை!

நெருக்கடி நிலையை நெஞ்சுயர்த்தி சந்தித்தவர் எங்கள் தலைவர். அன்றைய தாக்குதலால் ஏற்பட்ட ரணங்களால் உண்டான தியாகத் தழும்புகளை உடலில் இன்று சுமப்பவர் எம் தலைவர். மிசா என்றவுடன் மிரண்டு ஓடியவர்கள், ஒளிந்து கொண்டவர்கள் மத்தியில் கட்டிய மனைவியை ஐந்து மாதங்களில் சகோதரர் இளைஞர் அணிச் செயலாளர் உதய நிதியை வயிற்றில் சுமந்திருந்தவரை விட்டுப் பிரிந்து செல்லும் போது கண் கலங்கிய மனைவியிடம் கலைஞர் கவலைப்படாதே விரைவில் உன் கணவன் வந்து விடுவார் என்று கூற சிறைக் கொட்டிக்கு சிரித்துக் கொண்டே சென்ற சிங்கம்தான் எங்கள் தலைவர்.

உலக சர்வாதிகாரி என்றழைக்கப்பட்ட இட்லர் (தனது இறுதி நேரத்தில் அவனது படைகள் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தபோது கோயபல்ஸ், அதாவது இட்லரின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்தவர் தன்னை ரஷ்ய, அமெரிக்க, பிரிட்டிஷ் படை சூழ்ந்து கொண்ட போது குடும்பத்தோடு தப்பித்து ஓட முயலவில்லை. வென்றாலும், வீழ்ந்தாலும் இட்லர் மட்டுமே தன் வாழ்வு என்று வாழ்ந்து கடைசி மூச்சு போகும் நிலையில் இட்லரிடம் சென்று அவனது கண்ணெதிரில் நஞ்சு அருந்தி பிள்ளைகள், மனைவியோடு மாண்டு போனான் கோயபல்ஸ். ஏன் இதனை குறிப்பிடுகிறோமென்றால் பழனிச்சாமியே உங்கள் இறுதி காலத்தில் ஆபத்தென்றால் ஒருவரும் உடன் வர மாட்டார்கள்.

ஆனால் எங்கள் தலைவர் விழி அசைத்தால் போதும் விர்ரென்று பாய்வதற்கும் லட்சக்கணக்கில் தொண்டர்கள் இருக்க எங்களுக்கே சவாலா? ஊழலுக்காக தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதாம், எடப்பாடியே யாரால்? எப்போது? என்ன காரணத்திற்காக என்பதை உம்மால் கூற முடியுமா? நெருக்கடி நிலையை இந்திரா காந்தி இந்தியாவில் அறிவித்தத போது மற்ற அரசுகளெல்லாம் மௌனமாக சம்மதம் தெரிவித்ததைப் போல் கலைஞர் மௌனமாக இருந்திருந்தால் கேரள மாநில கம்யூனிஸ்ட் ஆட்சியை ஓராண்டு கூடுதலாக ஆட்சி புரிய அனுமதித்ததைப் போல கலைஞர் நெருக்கடி நிலையை எதிர்க்காமல் இருந்தாலே போதும், தி.மு.க. அரசிற்கும் ஓராண்டு கூடுதலாக அறிவிக்கிறோம் என்று அன்றைய உள் துறை அமைச்சர் ஓம் மேத்தா மூலம் இந்திராகாந்தி முயல அதற்கு ஒத்து போகாமல் ஜனநாயகப் படுகொலையை எந்நாளும் அனுமதிக்கமாட்டேன் என்று கூறியவர் தான் தலைவர் கலைஞர்.

முதுகெலும்புள்ள தமிழன் தானென்று இந்தியாவிற்கே காண்பித்தார். பதவியைக் காப்பாற்ற பல்லிளித்து பணிந்து நிற்கவில்லை. அதற்காகத் தான் கலைஞர் ஆட்சி முதலில் கலைக்கப்பட்டது. அதன் பிறகு 1990ல் விடுதலைப் புலிகளால் இ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா அவரது சக போராளிகளோடு சென்னை கோடம்பாக்கம் ஜக்கரியா சாலையில் படுகொலை செய்யப்பட்டார். இதனை காரணமாக வைத்து விடுதலைப் புலிகளோடும், உல்பா தீவிரவாதிகளோடும் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களுக்கு ரகசிய தகவல்களை கூறிவருகிறது தி.மு.க அரசு என்று மாய பிம்பத்தை உருவாக்கி அன்றைய ஜனாதிபதியாக இருந்த ஆர்.வெங்கட்ராமன் துணையோடு சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது, சுபோத்கான் சகாய் என்ற உள்துறை அமைச்சரின் உதவியோடு தமிழக ஆளுநராக சுர்ஜித் சிங் பர்னாலா தி.மு.க அரசிற்கு எதிராக அறிக்கை தர மறுத்த போதும் நவஉ. என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி கலைஞர் அரசை மற்றொரு முறை கலைத்தனர்.

இதில் எங்கே ஊழலுக்காக தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது என்பதை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கூட ஒழுங்காக கூற முடியாது எய்ட்ஸ் மருத்துவமனை என்று பேசிய அதிகம் படிக்கும் அறிவாளி என்று தன்னை தானே கூறிக் கொள்ளும் பழனிச்சாமி கூறிடுவாரா? காங்கிரஸ் மோகன் குமாரமங்கலம், கம்யூனிஸ்ட் கல்யாணசுந்தரம், சேலம் கண்ணன் போன்றோர் தயாரித்துக் கொடுத்த பொய் அறிக்கையை தி.மு.க.விற்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டாக கொடுத்து விசாரணையின் போது எதில் ஊழல் என்று தனக்குத் தெரியாது. சேலம் கண்ணன் எழுதிக் கொடுத்ததைத் தான் ஊழல் குற்றச்சாட்டாக கொடுத்தேன் என்று எம்.ஜி.ஆர். கூறியதெல்லாம் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியுமா? இதில் எங்கு ஊழல் தண்டனை உள்ளது. ஊழலுக்காக எத்தனை அ.தி.மு.கவினர் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்பதை எழுதட்டுமா?

இவர் மீதே உள்ள டெண்டர் ஊழலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய சி.பி.ஐ. விசாரணைக்கு இந்த உத்தமர் எதற்காக தடை வாங்க ஓடினார் உச்ச நீதிமன்றத்திற்கு? இந்த ஊழலின் ஊற்றுக் கண் எடப்பாடி இந்த மூன்று மாதத்தில் மட்டும் ரூ.2155 கோடி டெண்டர் ஊழல் செய்ததை விடமாட்டேன் என்று எங்கள் தலைவர் தளபதி அறிவித்தவுடன் பித்து பிடித்து எடப்பாடி வரம்பு மீறிப் பேசி வருகிறார். அண்ணா பெயரில் உள்ள கட்சியின் முதல்வராக இருந்து பேசி வரும் உமக்கு அண்ணா கடைசியாக மருத்துவரிடம் அனுமதி பெற்று படித்து முடித்த புத்தகம் என்னவென்று கூறுவீரா?

சாதாரண இராணுவ வீரனாக இருந்து பிரான்ஸ் நாட்டு மக்களால் அதிபராக ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரு காலத்தில் ஐரோப்ப கண்டத்தால் ஆச்சரியத்தோடு பார்க்கப்பட்டு உலகமே அதிர்ந்து பார்த்திட்ட மாவீரனாய் திகழ்ந்த நெப்போலியனைப் போல் இன்று பதிமூன்று வயது பள்ளி மாணவனாக இருந்த காலத்திலிருந்து சாதாரண தொண்டனாக தொடங்கி இன்று தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக நாட்டு மக்களால் இதயமுற ஏற்றுக்கொள்ளப்பட்டவர்தான் எம் தலைவர் தளபதி. அவருக்கு எதிராக வரம்பு மீறி பேசாதீர்! வாங்கிக்கட்டிக் கொள்ளாதீர்! எங்களாலும் ஒருமையில் பேசவும் எழுதவும் முடியும். முதல்வர் என்கிற பதவிக்காக மரியாதை கொடுக்க வேண்டியுள்ளது. வேண்டாம் விபரீத விளையாட்டு! நாகரிகமாக பேசக்கற்றுக் கொள்ளவும்.

banner

Related Stories

Related Stories