அரசியல்

அரியர்ஸ் ரத்து குழப்பம்: “கமிஷனுக்காக தமிழகத்தை அடகுவைத்த அடிமைகளே காரணம்” - உதயநிதி ஸ்டாலின் சாடல்

பொறியியல் மாணவர்கள் அரியர்ஸ் தேர்ச்சி விவகாரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு எடுபிடி அதிமுக அரசே காரணம் என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

அரியர்ஸ் ரத்து குழப்பம்: “கமிஷனுக்காக தமிழகத்தை அடகுவைத்த அடிமைகளே காரணம்” - உதயநிதி ஸ்டாலின் சாடல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் தவிர பிற ஆண்டு மாணவர்களும், அரியர் தேர்வு கட்டணம் செலுத்திய கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரி மாணவர்கள் என அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், "பொறியியல் படிப்பில் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி" என்ற தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

AICTE விதிகளை மீறி அரியர்ஸ் மாணவர்களுக்கு தேர்ச்சியை அறிவித்தது பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் கேள்விக்குறியாகும் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார். இதற்கு, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக இருக்கக் கூடிய கே.பி. அன்பழகன், துணைவேந்தர் சூரப்பாவின் கருத்தை AICTE கருத்தாக திணிப்பதை ஏற்க முடியாது என கூறியிருந்தார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வில்லாமல் தேர்ச்சியென அறிவிக்க முடியாது எனும் தன் கருத்தை AICTE கருத்தாக சூரப்பா திணிக்க பார்க்கிறார்’ என்கிறார் உயர்கல்வி அமைச்சர். கர்நாடக சூரப்பாவை அண்ணா பல்கலை துணைவேந்தராக மோடி திணித்தபோது மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருந்த எடுபிடி அரசே மாணவர்களின் குழப்ப நிலைக்கு காரணம்!

‘பல்கலை வளாகங்களை காவிமயமாக்க வேண்டாம்’ என தலைவர் மு.க.ஸ்டாலின் அன்று கண்டித்தார். கமிஷனுக்கு பங்கம்வருமோ என அமைதியாக இருந்துவிட்டு இன்று தேர்தல் வந்ததும், அடிமை வாழ்விலிருந்து மீண்டதுபோல் நாடகமாடினால் நம்பிவிடுவோமா? நீங்கள் அடிமைகளே, கமிஷனுக்காக தமிழகத்தை அடகுவைத்த அடிமைகளே!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories