அரசியல்

#DelhiBurns : “இஸ்லாமியருக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக வருவேன் என்ற ரஜினி எங்கே?”- தி.மு.க எம்.பி கேள்வி!

இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக வீதிக்கு வருவேன் எனச் சொன்ன ரஜினிகாந்த் எங்கே எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தருமபுரி தி.மு.க எம்.பி, டாக்டர்.செந்தில்குமார்.

#DelhiBurns : “இஸ்லாமியருக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக வருவேன் என்ற ரஜினி எங்கே?”- தி.மு.க எம்.பி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக வீதிக்கு வருவேன் எனச் சொன்ன ரஜினிகாந்த் எங்கே? தொப்பி போடாத இஸ்லாமியர் டாக்டர் ராமதாஸ் எங்கே?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தருமபுரி எம்.பி., செந்தில்குமார்.

சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு ஆதரவு தெரிவித்ததோடு, குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றார்.

மேலும், ஒருவேளை முஸ்லிம்களுக்கு ஏதாவது ஆபத்து என்றால் முதல் ஆளாக நான் குரல் கொடுப்பேன் என்றும் தெரிவித்திருந்தார். ரஜினியின் இந்த பா.ஜ.க ஆதரவு பேச்சு கடும் கண்டனத்திற்குள்ளானது.

அதன்பிறகு சென்னை வண்ணாரப் பேட்டையில் நடைபெற்ற இஸ்லாமியர் போராட்டத்தின்போது தடியடி நடத்தப்பட்டபோதும், உயிரிழப்பு ஏற்பட்டபோதும் ரஜினி முதல் குரல் கொடுக்காதது மட்டுமல்ல மவுனம் காத்தே வருகிறார்.

#DelhiBurns : “இஸ்லாமியருக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக வருவேன் என்ற ரஜினி எங்கே?”- தி.மு.க எம்.பி கேள்வி!

தற்போது, தலைநகர் டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடி வருவோர் மீது சி.ஏ.ஏ ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கி வருகின்றனர். இதனால், ஏற்பட்ட பெரும் வன்முறையில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் பற்றியெரியும்போதும், இஸ்லாமியர்களுக்காக முதல் குரல் கொடுப்பேன் எனச் சொன்ன ரஜினி வாய் திறக்காமல் இருந்து வருகிறார்.

இதுகுறித்து, தருமபுரி மக்களவைத் தொகுதி தி.மு.க எம்.பி, டாக்டர்.செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "டெல்லி எரிகிறது; இஸ்லாமியர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்படுகிறார்கள். இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக வீதிக்கு வருவேன் எனச் சொன்ன ரஜினிகாந்த் எங்கே? தொப்பி போடாத இஸ்லாமியர் டாக்டர் ராமதாஸ் எங்கே? இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று சொன்ன முதலமைச்சர் எடப்பாடி எங்கே?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories