அரசியல்

“உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சதி செய்கிறது அ.தி.மு.க அரசு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தொடர்ந்து, பல குழப்பங்களைச் செய்து, உள்ளாட்சி தேர்தலுக்கு தடை பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் அ.தி.மு.க அரசு செயல்படுவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

“உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சதி செய்கிறது அ.தி.மு.க அரசு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த அ.தி.மு.க அரசு சதி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். இதுதொடர்பாக இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மு.க.ஸ்டாலின்.

அப்போது பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலுக்கு யாராவது தடை பெற்று தேர்தலை நிறுத்திடுவார்களா என்கிற எண்ணத்தோடேயே அ.தி.மு.க அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதற்கான அனைத்து சதித் திட்டங்களையும் தீட்டிவிட்டு, தி.மு.க தான் தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறது என தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டை சொல்லி வருகிறார்கள் ஆளும்கட்சியினர்.

ஆளுங்கட்சியினராவது அரசியல் நோக்கத்தோடு இதைச் சொல்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. மக்களுக்கு உண்மையைச் சொல்லவேண்டிய ஊடகங்களும், தி.மு.க தான் உள்ளாட்சித் தேர்தலை தடுக்க முயற்சிக்கிறது என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதுதான் வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

“உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சதி செய்கிறது அ.தி.மு.க அரசு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

இந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க அரசு செய்திருக்கும் குழப்பங்கள்

1. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வார்டு மறுவரையறையை இதுவரை செய்யவில்லை.

2. புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறையை இதுவரை செய்யவில்லை.

3. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளின் பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை இன்னும் பின்பற்றவில்லை.

4. மாவட்ட பஞ்சாயத்துகளுக்கும் இன்னும் அ.தி.மு.க அரசு இடஒதுக்கீடு செய்யவில்லை.

அதுமட்டுமல்லாமல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டதை மாற்றி, மறைமுக தேர்தல் முறையை கொண்டுவந்திருக்கிறார்கள். இந்தக் குழப்பம் ஏன்?

“உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சதி செய்கிறது அ.தி.மு.க அரசு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தொடர்ந்து, பல குழப்பங்களைச் செய்து, இதன் மூலமாக யாராவது நீதிமன்றத்திற்கு சென்று உள்ளாட்சி தேர்தலுக்கு தடை பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

முறைப்படுத்தி இந்தத் தேர்தலை நடத்திட வேண்டும் என்பதில் தி.மு.க விழிப்போடு இருக்கிறது. அதே நேரத்தில், முறையான ஏற்பாடின்றி உள்ளாட்சித் தேர்தலை நடத்த முற்பட்டால் அதைச் சந்திக்கவும் தயாராக இருக்கிறது தி.மு.க” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories