அரசியல்

“மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து செயற்படுங்கள்” - மஹாராஷ்டிரா கூட்டணி அரசுக்கு ப.சிதம்பரம் வாழ்த்து!

கட்சி விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு பொதுமக்களுக்கு தேவையானவற்றை செயல்படுத்த ஒன்றிணைந்து செயற்படுங்கள் என மஹாராஷ்டிரா அரசுக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

“மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து செயற்படுங்கள்” - மஹாராஷ்டிரா கூட்டணி அரசுக்கு ப.சிதம்பரம் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டு, 99 நாட்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, பா.ஜ.க அரசின் தவறான முடிவுகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார் ப.சிதம்பரம். அவர் சிறைக்குச் சென்ற நிலையில், அவரது ஆலோசனைப்படி அவரது குடும்பத்தினர் ட்வீட் செய்து வருகின்றனர்.

ப.சிதம்பரத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ''அரசியலமைப்புச் சட்ட நாளில் நவம்பர் 23ம் தேதி முதல் 26ம் தேதிக்கு இடையே மகாராஷ்டிராவில் நடந்த அதிர்ச்சி தரக்கூடிய அரசியலமைப்புச் சட்ட விதிமுறை மீறல்தான் நம்முடைய நினைவில் இருக்கும்.

அதிகாலை 4 மணிக்கு குடியரசுத் தலைவர் அலுவலகத்தை எழுப்பி, மகாராஷ்டிராவில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கி கையொப்பமிடக் கூறியது குடியரசுத் தலைவர் அலுவலகத்தின் மீதான தாக்குதல். காலை 9 மணி வரை உங்களால் காத்திருக்க முடியாதா?

சிவசேனா - தேசியவாத காங். - காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்திற்கு எனது வாழ்த்துகள். உங்களது தனிப்பட்ட கட்சி விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, விவசாயிகளின் நலன், முதலீடு, வேலைவாய்ப்பு, சமூக நீதி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் ஆகிய பொதுவான நலன்களை செயல்படுத்த ஒன்றிணைந்து செயற்படுங்கள்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories