அரசியல்

’தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,வுக்கு 1000 கோடி கொடுத்தாரா?’ : மீண்டும் சர்ச்சையில் எடியூரப்பா

தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் ஒருவர், கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனக்கு 1,000 கோடி ரூபாய் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

’தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,வுக்கு 1000 கோடி கொடுத்தாரா?’ : மீண்டும் சர்ச்சையில் எடியூரப்பா
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கர்நாடக அரசியலில் ஏற்பட்ட குழப்பத்தால், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ் கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி தற்போது நடந்து வருகிறது.

கர்நாடகாவில் 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் டிசம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 15 தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.க சார்பில் கடந்த 2018 தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் தங்களுக்கு போட்டியிட அனுமதி வழங்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

’தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,வுக்கு 1000 கோடி கொடுத்தாரா?’ : மீண்டும் சர்ச்சையில் எடியூரப்பா

சமீபத்தில் நடைபெற்ற பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் எடியூரப்பா பேசிய பேச்சு அடங்கிய ஆடியோ சமீபத்தில் வெளியானது. அதில், “தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க தேசிய தலைவர் உத்தரவுப்படி மும்பையில் தங்கவைக்கப்பட்டனர்.

அவர்களைப் பாதுகாத்ததும் அவரே. அவர்களின் தியாகத்தால் பா.ஜ.க அரசு அமைந்துள்ளது. அதனால் இடைத்தேர்தலில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்குத்தான் இந்த முறை சீட் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

எடியூரப்பாவின் இந்த பேச்சு கர்நாடக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி முறையிட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தார்.

’தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,வுக்கு 1000 கோடி கொடுத்தாரா?’ : மீண்டும் சர்ச்சையில் எடியூரப்பா

இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் ஒருவரான நாராயண கவுடா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது கிருஷ்ணராஜ்பேட்டை தொகுதியின் வளர்ச்சிக்கு 1,000 கோடி ரூபாய் தருவதாகக் கூறினார் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறிய அவர், பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் என்னை எடியூரப்பாவின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். நாங்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்ததும், அவர் என்னை உட்காரச் சொன்னார், அவர் மீண்டும் முதலமைச்சராக ஆதரிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

நான் கிருஷ்ணராஜ்பேட்டை தொகுதியின் வளர்ச்சிக்கு ரூ.700 கோடி ஒதுக்குமாறு அவரிடம் கேட்டேன். மேலும் ரூ.300 கோடி சேர்த்து 1,000 கோடி ஒதுக்குவதாக கூறினார். அதன் பிறகு அந்த பணத்தையும் வழங்கினார்.

இவ்வளவு பெரிய மனிதரை நான் ஆதரிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா, நான் செய்தேன். ஆனால், தற்போது தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என எடியூரப்பா தெரிவித்துள்ளது வேதனையாக உள்ளது'' எனத் தெரிவித்தார். நாராயண கவுடாவின் பேட்டி கர்நாடக அரசியலில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories