அரசியல்

“டாக்டர் ஆகவேண்டிய அனிதா அரசால் உயிரிழந்தார்; இப்போது எடப்பாடிக்கு டாக்டர் பட்டமா?” - உதயநிதி பேச்சு!

நாங்குநேரி பகுதியில் காங். வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் உதயநிதி ஸ்டாலின்.

“டாக்டர் ஆகவேண்டிய அனிதா அரசால் உயிரிழந்தார்; இப்போது எடப்பாடிக்கு டாக்டர் பட்டமா?” - உதயநிதி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவேங்கடநாதபுரத்தில் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “மக்களின் வரவேற்பைப் பார்க்கும்போது நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி மோடியின் எடுபிடியாக இருக்கிறார். தமிழகம் புயலால் பாதிக்கப்பட்டபோது தமிழகம் வராத மோடி, தமிழக அரசு கேட்ட நிவாரணத் தொகையையும் தரவில்லை.

கடந்த எட்டு ஆண்டுகளில் தமிழக அரசு, மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அனைத்துப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளது.

“டாக்டர் ஆகவேண்டிய அனிதா அரசால் உயிரிழந்தார்; இப்போது எடப்பாடிக்கு டாக்டர் பட்டமா?” - உதயநிதி பேச்சு!

டாக்டர் ஆகவேண்டிய அனிதா தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு பெற்றுத் தராததன் காரணமாக உயிரிழந்தார். ஆனால் தமிழக முதல்வருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. அதையும் பெருமையுடன் கூறுகிறார் எடப்பாடி.

இந்தப் பகுதியில் தி.மு.க ஆட்சியில் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேல்நீர்த்தேக்கத் தொட்டி, இந்த வழித்தடத்தில் தேவைப்படும் பேருந்து சேவை உள்ளிட்ட மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றதும் நிறைவேற்றப்படும்.” எனப் பேசினார்.

banner

Related Stories

Related Stories