அரசியல்

அனைவரின் கருத்துகளின்படியே ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்டது என நிதியமைச்சர் கூறுவது தவறு - ப சிதம்பரம் ட்வீட்

நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலைக்கு ஜிஎஸ்டியும், அதை தவறாக செயல்படுத்தியதும் முக்கிய காரணம் என என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அனைவரின் கருத்துகளின்படியே ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்டது என நிதியமைச்சர் கூறுவது தவறு - ப சிதம்பரம் ட்வீட்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, பா.ஜ.க அரசின் தவறான முடிவுகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார் ப.சிதம்பரம். அவர் சிறைக்குச் சென்ற நிலையில், அவரது ஆலோசனைப்படி அவரது குடும்பத்தினர் ட்வீட் வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலைக்கு ஜிஎஸ்டியும், அதை தவறாக செயல்படுத்தியதும் முக்கிய காரணம் என பிரதமரின் பொருளாதார ஆலோசகரே ஒப்புக்கொண்டார் என ப.சிதம்பரத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

மேலும், அனைவரின் கருத்துகளின்படியே ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்டது என நிதியமைச்சர் கூறுவது தவறு. நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories