அரசியல்

“நாட்டைக் குட்டிச்சுவராக்கி வருகிறார்கள் ஆட்சியாளர்கள்” : விக்கிரவாண்டியில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஆரியூர் பகுதியில் தி.மு.க வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து திண்ணைப் பிரச்சாரம் செய்தார் மு.க.ஸ்டாலின்.

“நாட்டைக் குட்டிச்சுவராக்கி வருகிறார்கள் ஆட்சியாளர்கள்” : விக்கிரவாண்டியில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

வரும் அக்டோபர் 21ம் தேதி, நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, இரு தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது.

நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விழுப்புரம் வந்தார்,

இந்நிலையில், இன்று காலை விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஆரியூர் பகுதியில் தி.மு.க வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து திண்ணைப் பிரச்சாரம் செய்தார் மு.க.ஸ்டாலின்.

அப்போது மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது, “தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி மறைவால் இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 40 மக்களவைத் தொகுதிகளில் 39 தொகுதியில் வெற்றிபெறச் செய்துள்ள மக்களுக்கு நன்றி.

“நாட்டைக் குட்டிச்சுவராக்கி வருகிறார்கள் ஆட்சியாளர்கள்” : விக்கிரவாண்டியில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டைக் குட்டிசுவராக்கி வருகின்றனர். மத்திய அரசுக்கு அடிபணிந்து ஆட்சி நடத்திவருகின்றனர். மத்திய அரசுக்கு பயப்படவில்லையென்றால் தாங்கள் செய்த ஊழலுக்கு சிறையில் அடைக்கப்படுவோம் என்று அஞ்சுகின்றனர்.

தி.மு.க ஆட்சியில் இந்தப் பகுதியில் சாலை அமைக்கப்பட்டது; குடிநீர் பிரச்னை தீர்க்கப்பட்டது; தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதியோர் ஓய்வூதியம் முறையாக வழங்கப்படும்; மக்கள் பிரச்னைகள் தீர்க்கப்படும்.

கலைஞர் முதல்வராக இருந்தபோது அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்களைக் கொண்டுவந்தார். பெண்களுக்கு சொத்துரிமை, சுயஉதவிக் குழு அமைத்து சுழல் நிதி தந்தார். இந்தப் பகுதியில் பட்டா பிரச்னை உள்ளது அது தீர்த்து வைக்கப்படும்” என்று கூறினார் மு.க.ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories