அரசியல்

டிடிவி தினகரனுக்கு எதிராக தீர்மானம்; எடப்பாடிக்கு வாழ்த்து., அ.ம.மு.க-வில் பிளவை ஏற்படுத்திய புகழேந்தி!

டிடிவி தினகரன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யக்கோரி அ.ம.முக கூட்டத்தில் தீர்மானம் எடுத்துள்ளதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனுக்கு எதிராக தீர்மானம்; எடப்பாடிக்கு வாழ்த்து., அ.ம.மு.க-வில் பிளவை ஏற்படுத்திய புகழேந்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க-விலிருந்து பல முக்கிய நிர்வாகிகள், விலகி மாற்றுக் கட்சிகளில் சேர்ந்த வண்ணம் உள்ளனர். அந்த வரிசையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான பெங்களூரு புகழேந்தி மாற்றுக் கட்சிக்கு தாவ இருக்கிறார் என்று யூகிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அ.ம.மு.க-விலிருந்து தினகரன் வெளியேறவேண்டும் எனவும் தனது எம்.எல்.ஏ பதவியை அவர் ராஜினாமா செய்யவேண்டும் எனவும் நேரடி எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார் புகழேந்தி. அவரின் இந்த பேச்சு அ.ம.மு.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்ட போது, சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாகவும் விசுவாசியாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் புகழேந்தி. அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க-வில் சேர்ந்தார்.

அதன் பின்பு, தேர்தல் தோல்வி, முக்கிய நிர்வாகிகள் விலகல், தினகரனின் செயல்பாடுகள் என அனைத்துமே புகழேந்திக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் கோவை ஹோட்டல் ஒன்றில், தன்னை சந்திக்க வந்த கட்சியினரிடம் மாற்றுக் கட்சிக்கு செல்வது குறித்து புகழேந்தி பேசுவதாக வீடியோ ஒன்று வெளியானது.

டிடிவி தினகரனுக்கு எதிராக தீர்மானம்; எடப்பாடிக்கு வாழ்த்து., அ.ம.மு.க-வில் பிளவை ஏற்படுத்திய புகழேந்தி!

அ.ம.மு.க-வின் ஐ.டி விங் தான் இந்த வீடியோவை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் புகழேந்திக்கு அ.ம.மு.க-வில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன்பின்பு அ.ம.மு.க-வின் முக்கிய நிர்வாகி பட்டியலில் புகழேந்தி பெயர் இல்லாமல் போனது. இதற்கு பதிலளித்த புகழேந்தி “அ.ம.மு.க நான் உருவாக்கியது. அதில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது.” என பகிரங்கமாக பேட்டியளித்தார்.

இந்நிலையில், கோவையில் புகழேந்தி தலைமையில் அ.ம.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ பதவியை தினகரன் ராஜினாமா செய்ய வேண்டும் என தீர்மானங்கள் எல்லாமல் நிறைவேற்றியுள்ளனர்.

மேலும், டி.டி.வி தினகரன் பின்னால் இனி போகமுடியாது; எங்கள் கனவு பொய்த்துபோனது என்றார். அதுமட்டுமல்லாமல், ”இனி தினகரனால் அரசியலில் நிலைக்க கூட முடியாது. இடைத் தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றியில்லை என்றால் தினகரன் யாரிடமாவது விலை போய்விடுவார்” என கடுமையாக சாடினார்.

டிடிவி தினகரனுக்கு எதிராக தீர்மானம்; எடப்பாடிக்கு வாழ்த்து., அ.ம.மு.க-வில் பிளவை ஏற்படுத்திய புகழேந்தி!

அதுமட்டுமின்றி, கட்சி மாறும் நிலைமையை வெளிப்படையாக பேசாத புகழேந்தி, தினகரனை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய அதேவேளையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அ.தி.மு.க-விற்கோ, கட்சிக்கோ பாதிப்பு என்றால் சிப்பாய்கள் போன்று நின்று காப்பாற்றுவோம் என்று அ.தி.மு.க-வின் கொள்கை பரப்பு செயலாளராகவே புகழேந்தி மாறியதாக கூறுகின்றனர் அவரது பேச்சைக் கேட்டவர்கள்.

அ.ம.மு.கவில் ஏற்பட்டிருக்கும் கோஷ்டிகளில் எந்த பக்கம் நிற்பது எனத் தெரியாமல் அக்கட்சியினர் குழம்பிப் போயிருக்கிறார்களாம்.

banner

Related Stories

Related Stories