அரசியல்

ராதாபுரத்தில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை : வெற்றி பெறப்போவது யார் என நாளை முடிவு தெரியும்!

ராதாபுரத்தில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரி அதிமுக எம்எல்ஏ இன்பதுரையின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

ராதாபுரத்தில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை : வெற்றி பெறப்போவது யார் என நாளை முடிவு தெரியும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடைப்பெற்ற தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க வேட்பாளர் அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இன்பதுரை தி.மு.க. வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் குழறுபடி இருப்பதாக அந்த தொகுதியில் அப்பாவு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், 203 தபால் வாக்குகளை மட்டும் வரும் 21ம் தேதி மீண்டும் எண்ண வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், ராதாபுரம் தொகுதியில் வாக்குகள் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகளையும், தபால் வாக்குகளையும் வரும் 4ம் தேதி உயர் நீதிமன்ற தலைமைப்பதிவாளரிடம் ஒப்படைக்கவும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அவர் உத்தரவிட்டார்.

அப்பாவு
அப்பாவு

உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ இன்பதுரை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தாங்கள் உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளதால் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் என்று அவசர முறையீடு செய்தார்.

இதுகுறித்து தேர்தல் ஆணையத் தரப்புக் கருத்தை நீதிபதி கேட்டார். தேர்தல் ஆணையம் தரப்பில், “ 4ம் தேதி மறுவாக்கு எண்ணிக்கை நடத்துவது சிரமம். ஆகவே கால அவகாசம் வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் வழக்கை 3ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இன்பதுரை தரப்பில், தபால் வாக்குப் படிவத்தில் சான்றொப்பம் செய்ய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், பொது முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் தபால் வாக்குகளை எண்ண உத்தரவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு செல்லாததாகி விடும் எனவும் வாதிட்டார். மேலும் வாக்கு மறு எண்ணிக்கைக்கு 3 வாரங்கள் தடை விதிக்க வேண்டும் எனக் கோரினார்.

தி.மு.க வேட்பாளர் அப்பாவு தரப்பில், வாக்குகள் எண்ணுவதில் பல்வேறு முறைக்கேடுகள் நடந்துள்ளதை கருத்தில் கொண்டே, நீதிமன்றம் மறு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என வாதம் வைக்கப்பட்டது

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இன்பதுரை மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி, அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அப்போது இந்திய தேர்தல் ஆணைய தரப்பில், வாக்கு மறு எண்ணிக்கைக்காக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு கருவிகளும், தபால் வாக்குகளும் உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

வாக்கு மறு எண்ணிக்கைக்கு 24 பேரை நியமித்திருப்பதாகவும், தொழில்நுட்ப பொறியாளர்கள் இருவரை பணியமர்த்த தலைமைப் பதிவாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 1ம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, நாளை 11:30 மணிக்கு மேல் வாக்கு மறு எண்ணிக்கை நடத்த நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவிட்டார்.

முன்னதாக இன்பதுரை தரப்பில் வழக்கறிஞர் ராஜிவ் ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைகோரி மேல்முறையீடு இன்று செய்திருப்பதாக கூறினார். அதனை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு நீதிபதிகள் தேர்தல் வழக்குதானே இதில் என்ன அவசரம். வாக்குகளை மீண்டும் எண்ணுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேள்வி எழுப்பினர். பின்னர் முறைப்படி வழக்கு பட்டியலிடப்படும் போது விசாரிக்கப்படும் என்று கூறி அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டனர்.

banner

Related Stories

Related Stories