அரசியல்

“தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? குற்றத்தின் ஆட்சியா?” - மு.க.ஸ்டாலின் கேள்வி!

தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா குற்றத்தின் ஆட்சியா என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

“தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? குற்றத்தின் ஆட்சியா?” - மு.க.ஸ்டாலின் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் மணல் கொள்ளை ஏகபோகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அதை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் தாக்கப்படும் சம்பவமும் ஆங்காங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் அருகே உள்ளது மேலக்கோட்டையூரில் உள்ள குளத்தில், சில நாள்களாக திருட்டுத்தனமாக மண் அள்ளப்பட்டுவந்ததாக புகார் வந்ததை அடுத்து சட்டவிரோதமாக மண் எடுத்துக்கொண்டிருந்த மூன்று லாரிகளைப் பிடித்து தாழம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

தகவலறிந்து அப்பகுதி ஆளும் கட்சிப் பிரமுகர்கள், தாழம்பூர் காவல்நிலையத்திற்கு வந்தனர் ஆளும் கட்சிப் பிரமுகர்கள் “இது யாரோட லாரி தெரியுமா? எடப்பாடி பழனிசாமியோட லாரி. முதலமைச்சர் லாரி மேலயே வழக்குப் போடுறியா? இன்னும் கொஞ்ச நேரத்துல என்ன நடக்கப்போகுதுன்னு பாரு…” என மிரட்டியுள்ளனர்.

“தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? குற்றத்தின் ஆட்சியா?” - மு.க.ஸ்டாலின் கேள்வி!

அவர்கள் மிரட்டிச் சென்ற சிலமணிநேரத்தில், லாரிகளைப் பறிமுதல் செய்த தலைமைக் காவலர் ராஜ்குமார், காவலர் புருஷேத்தமன், தனிப்பிரிவு ஏட்டு இளையராஜா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நேற்று உத்தரவு வந்துள்ளது. இதனைக் கண்டு சம்பந்தப்பட்ட காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மணல் கொள்ளையர்கள் முதலமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இது எடப்பாடி பழனிசாமியின் லாரி என மிரட்டும் அளவுக்கு, சமூக விரோதிகள் நடமாட்டத்துக்கு முதலமைச்சர் பெயரைப் பயன்படுத்துவது போன்ற அராஜகம் வேறு என்ன இருக்க முடியும்?

ஆட்சி - எடப்பாடியின் கையிலா? மணல் கொள்ளையர்கள் கையிலா?

தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? குற்றத்தின் ஆட்சியா?'' என கேள்வியெழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories