அரசியல்

அடுத்து வருகிறது... ‘ஒரே நாடு ஒரே அடையாள அட்டை’ - உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்!

ஆதார், வாக்காளர் அடையாள அட்டை எண், வருமான வரி கணக்கு எண் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய குடியுரிமை அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அடுத்து வருகிறது... ‘ஒரே நாடு ஒரே அடையாள அட்டை’ - உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்திற்கு புதிய கட்டடம் திறப்பு விழா டெல்லியில் இன்று நடந்தது.

புதிய கட்டடத்தை திறந்து வைத்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ''2021 மக்கள்தொகை கணக்கெடுப்பில் அலைபேசி செயலி பயன்படுத்தப்படும். காகிதம் மூலமான கணக்கெடுப்பிலிருந்து டிஜிட்டல் கணக்கெடுப்பிற்கான மாற்றமாக இது இருக்கும்.

2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த தகவல்கள் மற்றும் அறிக்கை 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை விட மிகக் குறைந்த காலகட்டத்தில் வெளியிடப்படும்.

பாஸ்போர்ட், வங்கி கணக்கு, டிரைவிங் லைசென்ஸ், ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து விதமான ஆவணங்களையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் திறன் கொண்டதாக டிஜிட்டல் கணக்கெடுப்பு இருக்கும். அனைத்து விதமான பயன்பாடுகள் மற்றும் சேவைகளுக்கு ஒரே விதமான அடையாள அட்டை அல்லது அடையாள ஆவணம் தேவை.

கணக்கெடுப்பு விபரங்கள் அனைத்தும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்யப்படும். 2021ம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்காகவும், தேசிய குடியுரிமை பதிவேடு தயாரிக்கவும் ரூ. 12 ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளது'' எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories