அரசியல்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரலாறு தெரியாமல் பேசவேண்டாம் : ராஜேந்திர பாலாஜிக்கு பதிலடி கொடுத்த திருச்சி வேலுசாமி

ராகுல் காந்தி பற்றிய ராஜேந்திரபாலாஜியின் விமர்சனங்களுக்கு அவரது வழியிலேயே பதிலடி கொடுத்துள்ளார் காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுசாமி.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரலாறு தெரியாமல் பேசவேண்டாம் : ராஜேந்திர பாலாஜிக்கு பதிலடி கொடுத்த திருச்சி வேலுசாமி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சமீபத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரைப் பற்றி தரக்குறைவாகப் பேசியிருந்தார். “ஆங்கிலேயர்களை விரட்டப் போராடிய காங்கிரஸ் கட்சியில், வெள்ளையர்கள் தலைவராவதை ஏற்க முடியாது” என விமர்சித்தார் ராஜேந்திர பாலாஜி.

மேலும், மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததும், தலைவர் பதவியைவிட்டு ராகுல் காந்தி ஓடிவிட்டதாகவும் கடுமையாகச் சாடினார் ராஜேந்திர பாலாஜி. இது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வந்தனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ராஜேந்திர பாலாஜியை அரசியல் கோமாளி என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து செய்தித் தொலைக்காட்சி ஒன்றில், விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமியும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் இந்த விவாதத்தில் பங்கேற்றனர்.

சோனியா காந்தி இந்தியர் இல்லை என்பதால், ராகுல் காந்தியும் இந்தியர் இல்லை. வித்து இந்தியாவாக இருந்தாலும் விளைநிலம் இத்தாலி. ராகுல் இந்தியர் தான் என்றால் அவரது தாய்மாமன் யார்; அவரை யார் மடியில் அமரச் செய்து மொட்டை போட்டார்கள் எனக் குதர்க்கமாகக் கேள்வியெழுப்பி இருந்தார் ராஜேந்திர பாலாஜி.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய திருச்சி வேலுசாமி, “சோனியா காந்தி, ராகுல் காந்தி பற்றி விளைநிலம் - வித்து என ஏதேதோ கருத்துச் சொல்லும் ராஜேந்திரபாலாஜியிடம் கேட்கிறேன், நீங்கள் தெய்வம் எனக் கொண்டாடும் எம்.ஜி.ஆரின் வித்தும், விளைநிலமும் எங்கே? அவர் தமிழரா?

‘அம்மா’ என நீங்கள் அழைக்கும் ஜெயலலிதா பிறந்தது எங்கே? அவரது அம்மா பிறந்தது எங்கே? நீங்கள் சொல்லும் வித்து - விதைநிலம் கதையெல்லாம் அவர்களுக்குப் பொருந்தாதா?” என அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பினார்.

banner

Related Stories

Related Stories