அரசியல்

“சர்வாதிகார ஆட்சியைக் கொண்டுவரவே ஒரே நாடு என பேசுகிறது பா.ஜ.க” : அமித்ஷா பேச்சுக்கு திருச்சி சிவா கருத்து

பல கட்சி ஜனநாயகம் தோல்வியடைந்துவிட்டதாக அமித்ஷா கூறிய கருத்துக்கு திருச்சி சிவா பதிலடி கொடுத்துள்ளார்.

“சர்வாதிகார ஆட்சியைக் கொண்டுவரவே ஒரே நாடு என பேசுகிறது பா.ஜ.க” : அமித்ஷா பேச்சுக்கு திருச்சி சிவா கருத்து
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டில் உள்ள அனைவரையும் இந்தி மொழியால் மட்டுமே ஒருங்கிணைக்க முடியும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இதனையடுத்து, பல கட்சி ஜனநாயகம் தோல்வி அடைந்துவிட்டதாக மக்கள் மத்தியில் எண்ணம் எழுந்துள்ளது என தற்போது மீண்டும் ஒரு கருத்தை அமித்ஷா கூறியுள்ளார்.

இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசியுள்ளார். அதில், “ஒரே தேர்தல் எனத் தொடங்கி ஒரே கல்வி, ஒரே ரேஷன், ஒரே மொழி என பா.ஜ.க தன்னுடைய பட்டியலை நீட்டித்து வருகிறது. தற்போது ஒரே கட்சி என்றும் அதனை இழுத்துள்ளது. அடுத்தது ஒரே ஆட்சி என்று சொல்வதில் எந்த ஆச்சர்யமும் இல்லை” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “உலக அளவில் இந்தியா மரியாதை பெற்ற நாடாக திகழ்கிறது. அதற்கு தலைச்சிறந்த ஜனநாயகம் கொண்ட நாடாக இந்திய இருப்பதே காரணம். பா.ஜ.க ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்பதின் மூலம் சர்வாதிகாரத்தை கொண்டுவர முயற்சிப்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது” என்றார்.

“ஆகவே, ‘ஒரே’ என்ற ஒற்றைச் சொல்லுக்குள் நாட்டை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக இதுபோன்று அவ்வப்போது பேச்சை முன்னிறுத்தி பா.ஜ.க வெட்ட வெளிச்சமாகக் காட்டிக் கொண்டிருக்கிறது” என திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories