அரசியல்

அ.தி.மு.க கொடியில் மோடியின் படத்தை போட்டுக்கொள்ளலாம் - ஜவாஹிருல்லா

அ.தி.மு.க கொடியில் உள்ள அண்ணாவின் படத்தை அகற்றிவிட்டு மோடியின் படத்தை போட்டுக் கொள்ளலாம் என மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

அ.தி.மு.க கொடியில் மோடியின் படத்தை போட்டுக்கொள்ளலாம் - ஜவாஹிருல்லா
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா கும்பகோணம் அருகே தத்துவாஞ்சேரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ''தமிழக மக்களின் நலன்களை பாதுகாக்காமல் மத்திய அரசின் கொள்கைகளை அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் அ.தி.மு.க, அக்கட்சியின் கொடியில் உள்ள அண்ணாவின் படத்தை அகற்றிவிட்டு மோடியின் படத்தை போட்டுக் கொள்ளலாம்.

தமிழக அரசு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற கொள்கையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். மத்திய அரசு இந்தியை திணிப்பது நாட்டின் பன்முக தன்மையை கெடுத்துவிடும், மத்திய அரசு இந்தி திணிப்பதை தவிர்க்க வேண்டும் .

அவ்வாறு செய்யவில்லை எனில் மக்களோடு சேர்ந்து மனிதநேய மக்கள் கட்சி இந்தியை விரட்ட போராட்டம் நடத்தும்'' எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories