அரசியல்

“முதலில் காது கொடுத்து கேளுங்கள்” : பொருளாதார மந்தநிலையை சரிசெய்ய மோடிக்கு மன்மோகன் சிங் ஐந்து அறிவுரை!

இந்தியப் பொருளாதாரத்தில் நிலவும் பிரச்னைகளை சரி செய்ய பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஐந்து தீர்வு நடவடிக்கைகளை பரிந்துரை செய்துள்ளார்.

“முதலில் காது கொடுத்து கேளுங்கள்” : பொருளாதார மந்தநிலையை சரிசெய்ய மோடிக்கு மன்மோகன் சிங் ஐந்து அறிவுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் பா.ஜ.க அரசு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அக்கட்சி தலைவர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர்.

ஆனால் பா.ஜ.கவின் தவறான பொருளாதாரக் கொள்கையால் பெரும் பின்னடைவை இந்திய பொருளாதாரம் சந்தித்து வருகிறது. இதனை மூடிமறைக்கப் பல வேலைகளை பா.ஜ.க மேற்கொண்டாலும் பெரும் நிறுவனங்களின் முதலாளிகள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பற்றி வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

எந்தாண்டும் இல்லாத அளவிற்கு பா.ஜ.க அரசினால் சிறு குறு தொழில்கள் மட்டுமின்றி பெரும் நிறுவனங்களும் மூடப்படும் அபாயத்தை எட்டியுள்ளன. குறிப்பாக கடுமையான வீழ்ச்சி காரணமாக ஆட்டோமொபைல் துறையின் பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.

மிகப்பெரிய நிறுவனங்களான பிரிட்டானியா, பார்லே, மாருதி, டி.வி.எஸ் என உற்பத்தி நிறுவனங்களும், ஆட்டோ மொபைல் துறை சார்ந்த நிறுவனங்களும் உற்பத்தியை மேற்கொள்ள முடியாமல் தொழிற்சாலைகளை மூடியும், பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியும் வருகின்றன.

“முதலில் காது கொடுத்து கேளுங்கள்” : பொருளாதார மந்தநிலையை சரிசெய்ய மோடிக்கு மன்மோகன் சிங் ஐந்து அறிவுரை!

இந்நிலையில், இந்தியப் பொருளாதாரத்தில் நிலவும் பிரச்னைகளை சரி செய்ய பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஐந்து தீர்வு நடவடிக்கைகளை பரிந்துரை செய்துள்ளார்.

அறிவுரைகளுக்கு முன்னதாக, "நம் நாடு மிகப் பெரிய பொருளாதார சரிவில் இருக்கிறது என்பதை முதலில் ஒப்புக் கொள்ளுங்கள். அதன் பிறகு பொருளாதாரத்தை மேம்படுத்துவதைப் பற்றி யோசிக்கலாம்" என ஆவேசமாக பேசியுள்ளார்.

முதலாவதாக “மோடி அரசாங்கம் தலையங்க நிர்வாகத்தின் பழக்கத்திலிருந்து வெளியேற வேண்டும். முன்னதாக நிறைய நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக துறைசார் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு பதிலாக, முழு பொருளாதார கட்டமைப்பையும் ஒரே நேரத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் தற்போதாவது மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்று மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் “தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை வெளியே கொண்டு வருவதற்கு, வல்லுநர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களின் கருத்தை அரசாங்கம் திறந்த மனதுடன் கேட்க வேண்டும்.

“முதலில் காது கொடுத்து கேளுங்கள்” : பொருளாதார மந்தநிலையை சரிசெய்ய மோடிக்கு மன்மோகன் சிங் ஐந்து அறிவுரை!

இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த மோடி அரசு ஒரு குறைந்தபட்ச தெளிவான இலக்கை நோக்கி பயணிப்பதாக எனக்குத் தெரியவில்லை” எனவும் சொல்லி இருக்கிறார் மன்மோகன் சிங். மேலும், “ஜி.எஸ்.டி., வரிவிதிப்பை குறைக்க வேண்டும். இதனால், சிறிது காலத்திற்கு மட்டுமே வருவாய் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது தீர்வாக, “விவசாயத்தை புத்துயிர் பெற வைப்பதற்கும், கிராமப்புற நுகர்வு அதிகரிப்பதற்கும் புதிய வழிகளை உருவாக்க வேண்டும். விவசாய சந்தைகளை விடுவிக்கவேண்டும். அதன்மூலம் பணம் மக்கள் கைகளில் எட்டக்கூடும் இதனை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் மேற்கோள் காட்டியுள்ளோம் எனக் குறிப்பிடுகிறார்.

மூன்றாவது தீர்வாக, “மூலதன உருவாக்கத்துக்கு பணப்புழக்கத்தை அதிகரித்து, நெருக்கடிக்கு தீர்வு காண்பது அவசியம். இதனால் பொதுத்துறை வங்கிகள் மட்டுமல்லாமல், வங்கி சாராத நிதி நிறுவனங்களும் (என்.பி.எப்.சி.,) பாதிக்கப்படுகின்றன”. என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“முதலில் காது கொடுத்து கேளுங்கள்” : பொருளாதார மந்தநிலையை சரிசெய்ய மோடிக்கு மன்மோகன் சிங் ஐந்து அறிவுரை!

நான்காவது நடவடிக்கையாக, “ஜவுளி, ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டுவசதி போன்ற முக்கிய துறைகளுக்கு ஊக்கம் அளிக்கவேண்டும். இதற்கு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு எளிதாக கடன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்”. என அவர் கூறினார்.

தனது ஐந்தாவது நடவடிக்கையை விரிவாகக் கூறுகையில், “அமெரிக்கா-சீனா வர்த்தகப் போரின் காரணமாக ஏற்படும் வெற்றிட ஏற்றுமதியை கண்டறிந்து, புதிய ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை நாம் அங்கீகரிக்க வேண்டும். அதில் ஏற்படும் சுழற்சி மற்றும் கட்டமைப்பு சிக்கல்களுக்கான தீர்வுகான வேண்டும். இதன் மூலம் 3 முதல் 4 ஆண்டுகளில் அதிக வளர்ச்சி விகிதத்தை மீண்டும் எட்ட முடியும்.”என்று அவர் கூறியுள்ளார் என்றார்.

இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பியாக அறியப்பட்ட மன்மோகன் சிங் சொல்வதை மோடி அரசாங்கம் கேட்டு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சரி செய்யவேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளர்.

banner

Related Stories

Related Stories