அரசியல்

சி.பி.ஐ போன்ற தன்னாட்சி நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் - மன்மோகன் சிங்

சி.பி.ஐ, அமலாக்கத்துறை போன்ற தன்னாட்சி நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், '' ஜனநாயகத்தை வலுப்படுத்த நமக்கு அறிவார்ந்த, தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்கள் தேவை. நாடாளுமன்றத்தையும், அதன் செயல்பாடுகளையும் நாம் மதிக்க வேண்டும். கூட்டாட்சி அமைப்பை கொண்ட இந்தியா போன்ற நாடுகளில், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம், சி.பி.ஐ ஆகிய தன்னாட்சி நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அரசியலமைப்புக்கு உட்பட்டு அனைத்தும் நடக்க வேண்டும்" என்றார்.

மேலும், தற்போது நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம் குறைந்து வருகிறது. இந்தியாவை 5 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றுவதற்கு நல்ல திட்டமிடல் வேண்டும் என்றார்.

banner

Related Stories

Related Stories