அரசியல்

“நாம எல்லோரும் இந்துக்கள்... புதிய பாரதத்தை உருவாக்குவோம்’’ : பா.ஜ.க-வின் ஊதுகுழலாகவே மாறிய ஓ.பி.ஆர்!

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் நாம் அனைவரும் முதலில் இந்து, அப்புறம்தான் மற்றது என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“நாம எல்லோரும் இந்துக்கள்... புதிய பாரதத்தை உருவாக்குவோம்’’ : பா.ஜ.க-வின் ஊதுகுழலாகவே மாறிய ஓ.பி.ஆர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்ட விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டு இதே சின்னமனூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நான்தான் தொடங்கிவைத்தேன். தற்போது இந்த ஊர்வலத்தை நாடாளுமன்ற உறுப்பினராக தொடங்கி வைத்துள்ளேன். மோடி தான் மீண்டும் பிரதமராக வருவார் என கடந்தாண்டு கூறியிருந்தேன். அதேபோல மோடியே மீண்டும் பிரதமராக வந்துவிட்டார்.

இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கான முயற்சியில் பிரதமர் ஈடுபட்டு வருகிறார். நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து, வலிமையான புதிய பாரதத்தை உருவாக்கப் பாடுபட வேண்டும். நாம் அனைவரும் முதலில் இந்து. அதற்குப் பிறகுதான் மற்றவையெல்லாம். இந்து என்ற உணர்வு நமக்குள் ஏற்பட வேண்டும்” என தெரிவித்தார்.

முன்னதாக நாடாளுமன்றத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட முத்தலாக் மசோதாவை அவர் சார்ந்திருந்த அ.தி.மு.க கட்சி எதிர்த்த போதிலும் அவர் ஆதரித்துப் பேசியிருந்தார். இப்போது நாம் அனைவரும் முதலில் இந்து என பா.ஜ.கவினர் பேசுவது போலவே பேசி வருகிறார். இந்துத்வவாதிகளைப் போல ஓ.பி.ரவீந்திரநாத் குமார் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories