அரசியல்

“ஆதாரம் இருந்தால் புகார் செய்யலாமே..?” : குற்றம்சாட்டும் பா.ஜ.க தலைவர்களுக்கு டி.கே.சிவகுமார் பதில்!

“என்னைத் துன்புறுத்தி பா.ஜ.க தலைவர்கள் மகிழ்ச்சியடைய விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார்.

“ஆதாரம் இருந்தால் புகார் செய்யலாமே..?” : குற்றம்சாட்டும் பா.ஜ.க தலைவர்களுக்கு டி.கே.சிவகுமார் பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமார் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகார் குறித்து அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகிறது. தங்களுக்கு எதிரானவர்களை சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் பழிவாங்கும் முறையை பா.ஜ.க அரசு தொடர்ந்து கையாண்டு வருகிறது.

கடந்த 2017ம் ஆண்டு குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்குப் போட்டியிட்ட அகமது படேலை தோற்கடிக்க எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கத் திட்டமிட்டது பா.ஜ.க. காங்கிரஸின் அப்போதைய அமைச்சரும், தொழிலதிபருமான டி.கே.சிவகுமார் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 44 பேரை கர்நாடகாவுக்கு அழைத்து வந்து தனது பாதுகாப்பில் வைத்திருந்து பா.ஜ.க-வின் திட்டத்தை முறியடித்தார்.

அப்போதிருந்தே, டி.கே.சிவகுமார் மீதும், அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் குமார் மீதும் பா.ஜ.க அரசு கண் வைத்தது. பா.ஜ.க-வின் திட்டத்தை முறியடித்ததற்காக பழிவாங்கும் நோக்கில் பா.ஜ.க அரசு, சிவகுமார் மீது வருமான வரித்துறையை ஏவியது.

2017-ல் வருமான வரித்துறை அதிகாரிகள் டி.கே.சிவக்குமாரின் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, கஃபே காஃபி டே உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தாவுக்கு சொந்தமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு, அதன் மூலமாக நெருக்குதலுக்கு ஆளாகி சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார் சித்தார்த்தா.

சமீபத்தில், கர்நாடகத்தில் பா.ஜ.க செயல்படுத்தி ‘ஆபரேஷன் கமலா’ திட்டத்துக்கும் சிம்மசொப்பனமாக விளங்கினார் டி.கே.சிவகுமார். ஆனால், அதை முறியடித்து, ஜனநாயக விரோத முறையில் ஆட்சியைக் கைப்பற்றியது பா.ஜ.க.

“ஆதாரம் இருந்தால் புகார் செய்யலாமே..?” : குற்றம்சாட்டும் பா.ஜ.க தலைவர்களுக்கு டி.கே.சிவகுமார் பதில்!

இந்நிலையில், டி.கே.சிவகுமாரை டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்துக்கு நேரில் வந்து ஆஜராகுமாறு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து டி.கே.சிவகுமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த 2 ஆண்டுகளாகவே எனது சொத்துகள் குறித்து விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. நான் பினாமி சொத்துக்கள் வைத்திருப்பதாக திட்டமிட்டே பா.ஜ.க பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

நான் எந்த சட்ட விரோத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. தங்களிடம் ஆதாரம் இருப்பதாகக் கூறிவரும் பா.ஜ.க தலைவர்கள் விசாரணை அமைப்புகளிடம் அளிக்க வேண்டியதுதானே? என்னைத் துன்புறுத்திப் பார்க்கவேண்டும் என்பதுதான் பா.ஜ.க-வினரின் எண்ணம்.

அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் என்றால் என் மூலம் அதனை அனுபவிக்கட்டும். அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு ஆஜராக நான் தயாராக உள்ளேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories