அரசியல்

தமிழக பா.ஜ.க தலைவர் மாற்றம் : தமிழிசை பதவி காலி... ஹெச்.ராஜாவுக்கு அதிகரிக்கும் ஆதரவு - பின்னணி என்ன ?

பா.ஜ.க-வின் தமிழகத் தலைவர் பதவிக்கு பலருக்கிடையே கடும் போட்டி நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.

தமிழக பா.ஜ.க தலைவர் மாற்றம் : தமிழிசை பதவி காலி... ஹெச்.ராஜாவுக்கு அதிகரிக்கும் ஆதரவு - பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பா.ஜ.க உட்கட்சித் தேர்தல் வரும் செப்டம்பர் 11ம் தேதி முதல் நாடு முழுவதும் தொடங்கவிருக்கிறது. டிசம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதிக்குள் பா.ஜ.க மாநிலத் தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என பா.ஜ.க தேர்தல் அலுவலர் ராதா மோகன் சிங் அறிவித்துள்ளார்.

மாவட்ட, மாநில வாரியாக தலைவர்கள் தேர்வு முடிந்த பின்னர் தேசிய கவுன்சில் அமைக்கப்பட்டு பா.ஜ.க-வின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். தற்போது அமித்ஷா தலைவராகவும், ஜே.பி.நட்டா செயல் தலைவராகவும் செயல்பட்டு வருகின்றனர்.

அமித்ஷா உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகிப்பதால், ஜே.பி.நட்டா பா.ஜ.க-வின் தலைவராக்கப்படுவார் எனத் தெரிகிறது. தமிழகத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.

தற்போது தமிழிசை சவுந்திரராஜன் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். அவர் மீண்டும் தலைவராகும் முடிவில் இருக்கிறாராம். இந்நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன், எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா ஆகியோரிடையேயும் அடுத்த தலைவராவதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், பா.ஜ.க தேசிய செயலாளராக இருக்கும் ஹெச்.ராஜா தொடர்ந்து திராவிட மற்றும் சமூக நீதியை அவமரியாதை செய்யும் வகையில் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். அவரும் களத்தில் இருப்பதால் வலுவான போட்டி நிலவுகிறது.

எது எப்படியோ, பா.ஜ.க தலைவர் பதவி என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை மக்களின் எதிர்ப்பை மேலிடத்திற்கு அனுப்பும் வேலைதான். அதை யார் செய்தால் என்ன?

banner

Related Stories

Related Stories