அரசியல்

’பா.ஜ.க மீதான கோபத்தில் மக்கள் என்னை தோற்கடித்தார்கள்’ - மனம் திறந்த வேலூர் வேட்பாளர் ஏ.சி சண்முகம் !

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் நான் தோல்வி அடைந்ததற்கு பா.ஜ.க.,தான் காரணம் என அ.தி.மு.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

’பா.ஜ.க மீதான கோபத்தில் மக்கள் என்னை தோற்கடித்தார்கள்’ - மனம் திறந்த வேலூர் வேட்பாளர் ஏ.சி சண்முகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நடந்து முடிந்த வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் மொத்தம் 4,84,980 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். கதிர் ஆனந்த் அ.தி.மு.க வேட்பாளரை விட 8141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சியின் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,199 பெற்றிருந்தார்.

முன்னதாக வேலூர் தேர்தல் பிரசாரத்தின்போதே அ.தி.மு.க வேட்பாளரான ஏ.சி சண்முகத்திற்கு பா.ஜ.க தலைவர்கள் வாக்கு சேகரித்தால் நிச்சயம் தோல்வியைச் சந்திப்போம் என நினைத்த எடப்பாடி, பா.ஜ.க தலைவர்கள் யாரையும் பிரசாரத்திற்கு அழைக்கவே இல்லை. பா.ஜ.க.,வின் கொடியைக்கூட மக்களின் கண்களுக்கு காட்டாமல் பார்த்துக்கொண்டார்.

அ.தி.மு.க.,வின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என்றால், வேலூர் தொகுதியில் முஸ்லிம் மக்களின் வாக்குகள் அதிகம். மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க கொண்டு வந்த முத்தலாக் தடை சட்டம் மற்றும் என்.ஐ.ஏ பாதுகாப்பு மசோதா மற்றும் காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து போன்றவற்றால் கடும் எதிர்ப்புகள் இருந்தது.

இதனால் அதிருப்தி அடைந்த மக்கள் நிச்சயம் பா.ஜ.க கூட்டணியில் இருப்பதால், அ.தி.மு.க வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு வாக்களிக்கமாட்டார்கள் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

’பா.ஜ.க மீதான கோபத்தில் மக்கள் என்னை தோற்கடித்தார்கள்’ - மனம் திறந்த வேலூர் வேட்பாளர் ஏ.சி சண்முகம் !

ஆனால், உண்மையில் எடப்பாடி நினைத்ததை விட அதிக அடி அ.தி.மு.க.,வுக்கு விழுந்துள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள முஸ்லிம் இன மக்கள் அனைவரும் தி.மு.க பக்கம் சாய்ந்துள்ளனர். அதிலும் குறிப்பாக வாணியம்பாடி தொகுதி மொத்தமும் தி.மு.க.,வுக்கே தங்களது முழு ஆதரவை வழங்கியுள்ளது.

இதனால், சுமார் 22 ஆயிரம் வாக்குகள் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு கிடைத்துள்ளது. இது ஏ.சி சண்முகத்தை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இதை அவரே தனது வாயால் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் பா.ஜ.க - அ.தி.மு.க தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஏ.சி.சண்முகம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க கொண்டுவந்த என்.ஐ.ஏ சட்ட திருத்தம், முத்தலாக் சட்டம் மற்றும் காஷ்மீர் விவகாரம் ஆகியவற்றால் இஸ்லாமியர்கள் கடும் கோபமடைந்துள்ளார்கள்.

அவர்களின் அதிருப்தியினால்தான் தேற்றுப்போனேன். இல்லாவிட்டால், குறைந்தபட்சம் 1500 வாக்கு வித்தியாசத்திலாவது வெற்றி பெற்றிருப்பேன். இப்போது முஸ்லிம் மக்களின் வாக்குகள் அனைத்தும் தி.மு.க.,வுக்கு சென்றுவிட்டது” என தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.,வுடன் ஆரம்ப காலத்தில் இருந்தே நல்ல நட்பு பாராட்டி வரும் ஏ.சி சண்முகம் இப்படி பேசி இருப்பது அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், ஏ.சி சண்முகம் இதற்கு முன்னதாகவே இரண்டு முறை தேர்தலில் நின்று தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories