அரசியல்

ஜெயலலிதா எதிர்த்த அணை பாதுகாப்பு மசோதாவை மோடிக்கு அடி பணிந்து ஆதரித்த அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத்!

மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட அணை பாதுகாப்பு மசோதாவிற்கு தி.மு.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா எதிர்த்த அணை பாதுகாப்பு மசோதாவை மோடிக்கு அடி பணிந்து ஆதரித்த அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

நாடு முழுவதும் உள்ள அணைகளை முறைப்படுத்தி பாதுகாக்கும் நடவடிக்கை என்ற பெயரில் அணை பாதுகாப்பு மசோதா ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தி.மு.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

விவாதத்தில் பேசிய திமுக எம்.பி.ஆ.ராசா, ''மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. நிலப்பரப்பும், நீர்ப்பரப்பும் அந்தந்த மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால், அணை பாதுகாப்பு மசோதா மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது.

ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் கூட அணைப் பாதுகாப்பு என்பது விதிமுறைகளாகவே உள்ளன. பிரேசில், கனடா போன்ற நாடுகளில் அணைப்பாதுகாப்பு மாநிலங்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. பல்வேறு நாடுகளில், அணைப்பாதுகாப்பு குறித்து மாநிலங்களே முடிவெடுக்கின்றன. மசோதாவில் உள்ள அம்சங்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளன. எனவே இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்'' என தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

பின்னர் பேசிய அதிமுக எம்.பி. ரவீந்திரநாத், “ அணை பாதுகாப்பு மசோதாவை பிரதமர் தொலைநோக்குப் பார்வையில் கொண்டு வந்துள்ளார். தமிழக உரிமை மற்றும் அதன் செயல்பாடுகள் பாதிக்காத வகையில் அணை பாதுகாப்பு மசோதா அமைய வேண்டும்” என்று அந்த மசோதாவுக்கு ஆதரவாக பேசினார்.

முன்னதாக, 2016-ம் ஆண்டு, அணை பாதுகாப்பு மசோதா கொண்டு வரப்பட்ட போது ”இந்த மசோதா கொண்டு வந்தால் மாநில உரிமை பறிக்கப்படும். தமிழகம் அடிப்படையிலேயே இதை எதிர்க்கிறது.” என ஜெயலலிதா கூறியது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா எதிர்த்ததை இன்று ஆதரிக்கிறார் ரவீந்திரநாத். முன்னர் ஜெயலலிதா காலில் விழுந்து கிடந்த அ.தி.மு.கவினர், இப்போது மோடி காலில் விழுந்து கிடப்பதை தான் இந்த ஆதரவுக் குரல்கள் நிரூபிக்கின்றன.

பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்புகளுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது.

banner

Related Stories

Related Stories