அரசியல்

5 ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சிக்கு மோடி தான் காரணம் என்பது பொய் : முன்னாள் குடியரசுத் தலைவர் கோபம் 

இந்தியாவின் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சிக்கு மோடி ஆட்சியின் நிர்வாக திறனே காரணம் எனும் பா.ஜ.க.,வின் பொய் பிரசாரத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கண்டித்துள்ளார்.

5 ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சிக்கு மோடி தான் காரணம் என்பது பொய் : முன்னாள் குடியரசுத் தலைவர் கோபம் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த மாதம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில், புள்ளிவிபரங்களில் பல குளறுபடிகள் இருப்பதாகவும், தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளது என பொருளாதார வல்லுநர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் 5 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இருக்கிறது. இதற்கு மோடி ஆட்சியின் நிர்வாக திறனே காரணம் என பா.ஜ.க.,வினர் சுயதம்பட்டம் அடித்துவந்தனர். அது பொய் என பலர் ஆதாரப்பூர்வமாக வெளிக்கொண்டு வந்த நிலையில் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியும் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் பிரணாப் முகர்ஜி கலந்துக் கொண்டார். இதுகுறித்து அப்போது எழுப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது,“ நடந்து முடிந்த பட்ஜெட்டைத் தாக்கல் கூட்டத்தின் போது மத்திய நிதியமைச்சர் 2024ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலர் மதிப்பை அடைந்துவிடும் என தெரிவித்தார்.

இந்த மதிப்பு ஏதோ திடீரென்று சொர்க்கத்திலிருந்து வந்துவிடவில்லை, ஏன் பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளத்தை பிரிட்டிஷார்கள் இந்தியாவில் அமைக்கவில்லை. முன்னதாக விடுதலைக்கு பிறகு ஆட்சி செய்த இந்திய ஆட்சியாளர்களே அதை உருவாகினார்கள்.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி

முன்பு ஜவஹர்லால் நேரு உள்ளிட்டோர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட ஐ.ஐ.டி-கள், இஸ்ரோ, ஐ.ஐ.எம்-கள், இந்தியாவில் செயல்படும் வங்கி அமைப்பு போன்றவற்றால் இந்தியா பன்மடங்கு வளர்ந்துள்ளது. இதையெல்லாம் அடிப்படையாக வைத்துதான் இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்றுவோம் என நிதி அமைச்சர் சொல்ல வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.

மேலும் நமது முன்னோடிகள், திட்டமிட்ட பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தனர். ஆனால், இன்று இருப்பவர்கள் திட்ட கமிஷனையே கலைத்து விட்டனர்” என வேதனையுடன் தெரிவித்தார். அவரின் இந்த பேச்சு பா.ஜ.க-வினர் மத்தியில் அதிச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

முன்னதாக வெளிநாடுகளில் கடன் பத்திரங்கள் விற்பனை செய்யும் திட்டத்தால், நன்மையை விட கேடுகளே அதிகம் என மோடி அரசின் மீது திட்டக்குழு முன்னாள் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா அதிருப்தி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories