அரசியல்

மக்களை கவர பிரபலங்களை கட்சிக்குள் இழுக்கும் பா.ஜ.க : ரஜினி, தோனி என வரிசை கட்டும் பட்டியல் ?

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுங்கட்சியான மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்கிற முனைப்புடன் பல்வேறு முயற்சி செய்து வருகிறது பா.ஜ.க.

மக்களை கவர  பிரபலங்களை கட்சிக்குள் இழுக்கும் பா.ஜ.க : ரஜினி, தோனி என வரிசை கட்டும் பட்டியல் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஆபரேஷன் கமலா - கர்நாடக மாநிலத்தில் செயல்படுத்தத் தொடங்கியது போல், மேற்கு வங்கத்திலும் தனது வித்தையை தீவிரமாக காட்ட தொடங்கியுள்ளது பா.ஜ.க.

எப்படியாவது கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்க வேண்டி, நட்சத்திர இமேஜ் கொண்டவர்களை கட்சிக்குள் இழுக்கும் போக்கை நாடு முழுவதும் பின்பற்றி வருகிறது பா.ஜ.க. அந்த வகையில், மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ் மற்றும் முகுல் ராய் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் முன்னிலையில் பர்னோ மித்ரா உட்பட பல வங்காள நடிகர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

மக்களை கவர  பிரபலங்களை கட்சிக்குள் இழுக்கும் பா.ஜ.க : ரஜினி, தோனி என வரிசை கட்டும் பட்டியல் ?

வங்க மொழி திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் ரிஷி கௌசிக், காஞ்சனா மொய்த்ரா, ரூபஞ்சனா மித்ரா மற்றும் பிஸ்வாஜித் கங்குலி ஆகியோர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.அந்நிகழ்ச்சியில் பா.ஜ.க தலைவர்கள் ராகுல் சின்ஹா, சம்பித் பத்ரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பின்னர் பேசிய திலீப் கோஷ், பா.ஜ.க.,வில் சேருபவர்களை மாநில ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் துன்புறுத்துகிறது என்று குற்றம்சாட்டினார். இதனால்தான் மேற்கு வங்க மாநிலத்திற்கு வெளியே கட்சியில் சேர்வதற்கு விழாக்களை ஏற்பாடு செய்கிறது.பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மற்றும் மேம்பாட்டுப் பணிகளால் மாநில மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள் என்றார்.

பா.ஜ.க.,வில் சேரகூடாதென திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பல கவுன்சிலர்கள் துன்புறுத்தப்படுவதாக கோஷ் குற்றம் சாட்டினார். மேலும் டார்ஜிலிங்கைச் சேர்ந்த 17 நகராட்சி மன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க.,வில் சேர்ந்த பிறகு தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியவில்லை என்றும் கூறினார். இன்னும் சிலர் திரிணாமுல் கட்சியில் மீண்டும் சேர கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று அவர் கூறினார்.

மக்களை கவர  பிரபலங்களை கட்சிக்குள் இழுக்கும் பா.ஜ.க : ரஜினி, தோனி என வரிசை கட்டும் பட்டியல் ?

ஆளுங்கட்சியான மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்கிற முனைப்புடன் பல்வேறு முயற்சி செய்து வருகிறது பா.ஜ.க.

மேற்கு வங்கத்தில் மட்டுமில்லாது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் காலூன்ற அங்கு பிரபலமாக இருப்பவர்களை கட்சிக்குள் இழுக்கும் வேலையை பா.ஜ.க திறம்பட செய்து வருகிறது.

பா.ஜ.க.,வின் இந்த திட்டத்தில் சினிமா, நாடக, கிரிக்கெட் பிரபலங்களும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கிரிக்கெட் வீரர் கம்பீர் பா.ஜ.க.,வில் இணைந்ததும், இப்போது ரஜினி, தோனி உள்ளிட்ட பிரபலங்களை கட்சிக்குள் இழுக்க முயற்சி செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories