அரசியல்

‘அரசு வேலையை நம்பாதீங்க.. சுயதொழில் செய்ங்க..’ : தமிழக அமைச்சர்களின் லட்சணம் இதுதான்- இளைஞர்கள் அதிர்ச்சி

”அரசு வேலைக்காக இளைஞர்கள் காத்திருக்காமல் சுயதொழில் செய்ய முன்வரவேண்டும்” என அமைச்சர் ஜெயக்குமார் பேசி இருப்பது, பட்டதாரி இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

‘அரசு வேலையை நம்பாதீங்க.. சுயதொழில் செய்ங்க..’ : தமிழக அமைச்சர்களின் லட்சணம் இதுதான்- இளைஞர்கள் அதிர்ச்சி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக வேலையின்மை பிரச்னை முதலிடத்தில் உள்ளது. உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடாக திகழும் இந்தியாவில், படித்த பட்டதாரிகளுக்கு ஏற்ற வேலை என்பது எட்டாக்கனியாக உள்ளது. வேலையின்மையால் நாடுமுழுவதும் இளைஞர்கள் வறுமையில் தவறான பாதைக்கு செல்கின்ற அவலம் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் கூட, இந்தியாவில் வேலையின்மை விகிதம் 7.6 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் 2017-18 நிதியாண்டில் வேலையின்மை விகிதம் அதிகரித்ததாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் அண்மையில் தகவல் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி தேசிய அளவில் வேலைவாய்ப்பில்லாத மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இடம்பிடித்துள்ளது. இந்த தகவலை தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் வேலையின்மை தொடர்பாக மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிவித்தது.

இந்நிலையில், தமிழக அமைச்சர் ஜெயக்குமார் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, நீட் தேர்வு குறித்தும், ஹைட்ரோ கார்ப்பன் குறித்தும் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு வழக்காமான பதிலையே தெரிவித்தார். மேலும் வேலைவாய்ப்பு குறித்து எழுப்பிய கேள்விக்கு, அரசு வேலைக்காக காத்திருக்காமல் இளைஞர்கள் சுயதொழில் செய்ய முன்வர வேண்டும், 65 லட்சம் பேர் வேலைக்காக காத்திருக்கின்றார். அவர்களுக்கு முடிந்த அளவிற்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறோம் என அசால்ட்டாக பதில் சொல்லியிருக்கிறார். அவரின் இந்த பதில் பட்டதாரி இளைஞர் மத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘அரசு வேலையை நம்பாதீங்க.. சுயதொழில் செய்ங்க..’ : தமிழக அமைச்சர்களின் லட்சணம் இதுதான்- இளைஞர்கள் அதிர்ச்சி

மேலும் இது குறித்து இளைஞர் அமைப்பினர் ஒருவர் கூறுகையில், “ தமிழகத்தில் சுய தொழில் செய்வோருக்கு ஊக்குவிக்கும் வகையில் அரசு என்ன சேவைகள் செய்துள்ளது, என கேட்டால் அவர்களிடத்தில் எந்த பதிலும் இருக்காது. ஏனென்றால் ஆளும் அ.தி.மு.க அரசு சுயதொழில் செய்வோருக்கு தேவையான எந்த ஏற்பாடுகளையும் செய்துகொடுக்கவில்லை. மேலும் வங்கிகளும் படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு உதவி செய்ய முன்வருவதில்லை. இந்த சுழலில் இளைஞர்கள் சுய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், என்றால் எப்படி உருவாக்க முடியும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பேசிய அவர், மக்கள் படும் வேதனைகளை பற்றி இந்த அரசுக்கு எந்தவித கவலையும் இல்லை. தனியார் துறையிலும் வேலைவாய்ப்புகள் சரிந்து வருகின்றது. காலி பணியிடங்களை நிரப்ப அரசு எடுக்கம் நடவடிக்கை ஆமை வேகத்தில் தான் நகர்கிறது.

இதற்கு முன்னதாக பிரதமர் மோடி பாக்கோட விற்று சம்பாதிக்கலாம் என்கிறார், தற்போது அதன் கூட்டாளி அ.தி.மு.க அரசு சுய தொழில் என்று பேசுகிறார். வேலை வழங்கவேண்டிய அரசு மெத்தனமாக செயல்படுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. அரசின் இந்த செயல்கள் வேதனை அளிப்பதாக உள்ளது". என அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories