அரசியல்

“அமேதியை விட்டு என்றும் விலகமாட்டேன்” - தோற்கடித்தாலும் மக்களிடம் உருகிய ராகுல்காந்தி!

தேர்தலுக்கு பிறகு உத்தர பிரதேசத்தில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட தோல்விக்கான காரணத்தை கண்டறியும் வகையில் தொண்டர்களை சந்தித்து பேசினார் ராகுல் காந்தி.

“அமேதியை விட்டு என்றும் விலகமாட்டேன்” - தோற்கடித்தாலும் மக்களிடம் உருகிய ராகுல்காந்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத் தேர்தலில் அமேதி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதிகளில் மட்டும் லட்சோப லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் அமேதியில் தோல்வியை தழுவினார்.

இருப்பினர், தேர்தல் முடிந்த பிறகு முதல் முறையாக அமேதி தொகுதிக்கு சென்று காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தனது தோல்விக்கான காரணத்தை கண்டறியும் வகையில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தொகுதி மக்களை சந்தித்து பேசினார்.

“அமேதியை விட்டு என்றும் விலகமாட்டேன்” - தோற்கடித்தாலும் மக்களிடம் உருகிய ராகுல்காந்தி!

அப்போது, அரசியல் வாழ்வில் வெற்றி, தோல்விகள் வருவது இயல்பான ஒன்றுதான். ஆனால் அமேதியுடனான என்னுடைய பிணைப்பு தனிப்பட்டது. அமேதியை விட்டும், அதன் மக்களை விட்டும் என்றும் விலகிச் செல்லமாட்டேன் என உருக்கமாக பேசியுள்ளார்.

மேலும், உத்தர பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸை நிலைநாட்டுவதற்கான மிகப்பெரிய போராட்டத்துக்கு தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மக்களை சந்தித்ததை அடுத்து, ட்விட்டரில் பதிவிட்டிருந்த ராகுல் காந்தி, அமேதிக்கு வருவது என்னுடைய வீட்டிற்குள் வருவது போன்று உணர்கிறேன் என்றும், அமேதிக்கு வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories