அரசியல்

கலகக் கொடி தூக்கிய ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் - கவிழ்கிறதா கர்நாடகா அரசு!

கலகக் கொடி தூக்கிய ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் - கவிழ்கிறதா கர்நாடகா அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கர்நாடகாவில் ஆளும் கூட்டணியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜே.டி.எஸ்) எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேரும் , காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எட்டு பேரும் சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமாரை சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளனர்.

ஆளும் கட்சிகளின் 11 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா ஏற்கப்பட்டால், காங்கிரஸ்-ஜே.டி (எஸ்) அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க நேரிடும். அப்படி நடந்தால், எண்கள் அவர்களுக்கு சாதகமாக இல்லை.

கர்நாடக சட்டசபையில் சபாநாயகர் உட்பட மொத்தம் 225 உறுப்பினர்கள் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சி 105 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டு அதிக சீட்கள் கொண்ட கட்சியாக உள்ளது. ஆனால் காங்கிரஸ் (78), ஜே.டி (எஸ்) 37 எம்.எல்.ஏ.க்கள் என கூட்டணி சேர்ந்து ஆட்சியமைத்துள்ளன. அதில் ஜே.டி.எஸ் தலைவர் தேவ கவுடாவின் மகன் குமாரசாமி முதலைமைச்சராக இருக்கிறார். பகுஜன் சமாஜ் கட்சி, கே.பி.ஜே.பி தலா ஒரு எம்.எல்.ஏ மற்றும் ஒரு சுயேச்சை எம்.எல்.ஏவும் உள்ளனர். மேலும் ஒரு எம்.எல்.ஏ ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஆங்கிலோ இந்தியர். சபாநாயகர் நீங்கலாக கர்நாடக சட்டமன்றத்தின் மொத்த பலம் 224. ஆட்சி அமைக்க 113 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை.

தற்போது, காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 115 ஆக உள்ளது. மேலும், இந்த கூட்டணிக்கு பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.வின் ஆதரவும் உள்ளது. இது காங்கிரஸ்-ஜே.டி (எஸ்) கூட்டணி பலத்தை 117 ஆகக் கொண்டு செல்கிறது. காங்கிரஸ்-ஜே.டி (எஸ்) அரசாங்கம் தனியாக பரிந்துரைக்கப்பட்ட எம்.எல்.ஏ.வையும் சேர்த்தால் காங்கிரஸ்-ஜே.டி (எஸ்) கூட்டணியின் பலம் 118 ஆக அதிகரிக்கும். மறுபுறம் பா.ஜ.க.வுக்கு ஒரு எம்.எல்.ஏ மட்டுமே இருக்கும் கே.பி.ஜே.பி.யின் ஆதரவு உள்ளது. இதனால் பா.ஜ.க கூட்டணியின் எண்ணிக்கை 106 ஆக உள்ளது.

எட்டு காங்கிரஸ் மற்றும் மூன்று ஜே.டி (எஸ்) எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால், கர்நாடக சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 214 ஆக குறையும். சபாநாயகரைத் தவிர்த்து, சபை வலிமை 213 ஆகிறது. இந்த சூழ்நிலையில், புதிய அரசாங்கத்தை உருவாக்க தேவையான பெரும்பாண்மை எண்ணிக்கை 107 ஆக இருக்கும்.

பா.ஜ.க கூட்டணிக்கு ஏற்கனவே 106 எம்.எல்.ஏக்கள் இருப்பதால் இது மிகவும் சாதகமான சூழ்நிலையாக இருக்கும். இருப்பினும் பா.ஜ.க கூட்டணிக்கு இன்னும் ஒரு எம்.எல்.ஏ.வின் ஆதரவு தேவைப்படும். சுயேட்சை எம்.எல்.ஏ.வை தன் பக்கம் இழுக்க பா.ஜ.க முயற்சிக்கும். பா.ஜ.க கூட்டணிக்கு மற்றுமொரு வாய்ப்பு உள்ளது. அது என்னவென்றால், குறைந்தது இரண்டு காங்கிரஸ் அல்லது ஜே.டி (எஸ்) எம்.எல்.ஏ. விலகினால் சபையின் பலம் 212 ஆக குறையும். சபாநாயகரைத் தவிர்த்து, மொத்தம் 211 ஆகிறது, அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான எண்ணிக்கை 106 ஆக மாறும். இந்த எண்ணிக்கை பாஜக வசம் ஏற்கனவே இருப்பதால் எளிதில் ஆட்சியில் அமர்ந்துவிட முடியும்.

ஆனால், மொத்தம் 14 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் வழங்கியிருப்பதாக, ஆளும் ஜே.டி.எஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ எச்.விஸ்வநாத். ஒருவேளை அந்த ராஜினாமா சபாநாயகரால் ஏற்கப்பட்டால், ஆளும் காங்கிரஸ் - ஜே.டி.எஸ் கூட்டணி ஆட்சியை இழக்க நேரிடும்.

எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது, கட்சிகளை கபளீகரம் செய்வது போன்ற வழக்கமான பாணியில் இறங்காமல் பிற கட்சி எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து 'நல்லவர்களாக' காட்டிக் கொண்டு ஆட்சியில் அமரப்பார்க்கிறது பா.ஜ.க.

கர்நாடக அரசியலில் நீண்ட நாட்களாக இருந்த புகைச்சல், இன்று பற்றி எரியத் தொடங்கியிருக்கிறது. ஆளும் கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

banner

Related Stories

Related Stories