அரசியல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு FIRல் ஒரு போலீஸ் பெயர்கூட குறிப்பிடாதது ஏன்? கனிமொழி கேள்வி!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக இதுவரை முதல் தகவல் அறிக்கையில் ஒரு காவலர் பெயரைக் கூட சிபிஐ குறிப்பிடவில்லை என மக்களவையில் தி.மு.க எம்.பி. கனிமொழி கொதிப்புடன் பேசியுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு FIRல் ஒரு போலீஸ் பெயர்கூட குறிப்பிடாதது ஏன்? கனிமொழி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த ஆண்டு 100 நாட்களாக அமைதி வழியில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நூறாவது நாளான மே 22ம் தேதி அன்று ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை ஒடுக்கும் விதமாக, மக்களின் எழுச்சி போராட்டத்தை தடுத்து, தனது கார்ப்பரேட் விசுவாசத்தைக் காட்டுவதற்காக எடப்பாடியின் அ.தி.மு.க அரசு தனது காவல்துறையினரை ஏவி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட வைத்தது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு FIRல் ஒரு போலீஸ் பெயர்கூட குறிப்பிடாதது ஏன்? கனிமொழி கேள்வி!

இந்தக் கொடூர துப்பாக்கிச்சூட்டால் இளம்பெண் உட்பட 13 பேர் எடப்பாடியின் அதிகாரப்பசிக்குப் பலியாகினர். பின்னர், இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து 4 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஆனால் 10 மாதங்களாகியும் முழுமையான அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்யவில்லை.

இது தொடர்பாக மக்களவையில் இன்றைய விவாத நேரத்தின் போது பேசிய தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தி.மு.க. எம்.பி., கனிமொழி, மோடி அரசின் கீழ் உள்ள சி.பி.ஐ. அமைப்பு இதுவரை தூத்துக்குடியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்த முதல் தகவல் அறிக்கையில் ஒரு காவலரின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை என பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

இவ்வாறு மத்திய, மாநில அரசுகளுக்கு ஆதரவாகவும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பின் செயல்பாட்டின் மூலம் தங்களுக்கு நீதி கிடைக்கும் என எப்படி மக்கள் நம்பிக்கை வைத்திருப்பார்கள் என கொதித்தெழுந்துள்ளார் தி.மு.க எம்.பி., கனிமொழி.

மேலும், ஓராண்டாகியும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்தவர்களுக்கும் இதுவரை தமிழக அரசு சார்பாக எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

banner

Related Stories

Related Stories