அரசியல்

28ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை : எடப்பாடிக்கு தலைவலி கொடுக்க காத்திருக்கும் தி.மு.க !

பலத்த எதிர்பார்ப்புகளிடையே வரும் 28ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை. இதில், குடிநீர் பிரச்சினை, உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப தி.மு.க திட்டமிட்டுள்ளது.

28ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை : எடப்பாடிக்கு தலைவலி கொடுக்க காத்திருக்கும் தி.மு.க !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழக சட்டசபை வருகிற 28ம் தேதி காலை 10 மணிக்கு கூடும் என்று சட்டசபை செயலாளர் சீனிவாசன் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். சட்டசபை 28ம் தேதி கூடியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்படும். ஜூலை 1ம் தேதி முதல் சட்டசபை நிகழ்ச்சிகள் தொடங்கும்.

இந்த கூட்டத்தொடர் சுமார் ஒரு மாதம் நடைபெறும். குடிநீர் பிரச்சினை, உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர தி.மு.க கடிதம் கொடுத்துள்ளது. இதனால், சட்டசபை கூடியதும் முதல் நிகழ்வாக சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்து கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, 24ம் தேதி காலை 11 மணியளவில், தமிழக அமைச்சரவை கூட்டம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories