அரசியல்

கூடங்குளம் அணுக்கழிவு மையத்தை எதிர்த்து ஜூன் 25ம் தேதி போராட்டம் : திருமாவளவன் அறிவிப்பு!

கூடங்குளம் அணு உலை எதிரான கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுக்கழிவு மையத்தை எதிர்த்து ஜூன் 25ம் தேதி போராட்டம் : திருமாவளவன் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் அணுகழிவு மையத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் சார்பில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமைத் தாங்கினார். மேலும், மாற்றுக் கட்சி தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட சிதம்பரம் தொகுதி எம்.பி.,யும் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவில் எந்தபகுதியிலும் இந்த அணு உலையை அமைக்க யாரும் அனுமதிக்கமாட்டார்கள்.

இதனால் இரண்டு அனு உலைகளிலும் மின் உற்பத்தியை நிறுத்திவைக்கவேண்டும், மேலும் கூடுதலாக 4 அனு உலைகளை அமைக்கும் முயற்சியையும் கைவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.

கூடங்குளம் அணுக்கழிவு மையத்தை எதிர்த்து ஜூன் 25ம் தேதி போராட்டம் : திருமாவளவன் அறிவிப்பு!

மேலும் பேசுகையில், “அணு உலை குறித்து உச்ச நீதிமன்றம் முன்பே 5 ஆண்டுகள் அவகாசம் கொடுத்த பின்பும் மீண்டும் 5 ஆண்டுகள் அவகாசத்தை நீட்டியுள்ளது கண்டிக்கத்தக்கது.

இந்த திட்டத்தை எதிர்த்து போராடும் மக்களின் மீது ஆளும் அரசு பொய் வழக்குகளை பதிவு செய்கிறது. அந்த வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெறவேண்டும். நிரந்தர அணுகழிவு மையம் அமைப்பது குறித்த தெளிவான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும் வரை கூடங்குளத்தில் மின்னுற்பத்தியை நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேலும், “வருகின்ற ஜூன் 25ம் தேதி அனைத்து கட்சி சார்பில் நெல்லையில் இந்த திட்டத்திற்கு எதிராக அறப்போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த கோரிக்கைகளுக்கும், போராட்டத்திற்கும் அரசு செவி சாய்க்காவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுப்போம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories