அரசியல்

தமிழகத்தில் பா.ஜ.க-வின் தூதுவராகச் செயல்படுகிறார் கிருஷ்ணசாமி : தென்காசி எம்.பி விமர்சனம்!

தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு டாக்டர் கிருஷ்ணசாமி ஜால்ரா அடிப்பதாக தென்காசி தி.மு.க எம்.பி தனுஷ் M. குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் பா.ஜ.க-வின் தூதுவராகச் செயல்படுகிறார் கிருஷ்ணசாமி : தென்காசி எம்.பி விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு உதவிபெறும் பள்ளியில், ஏழை மாணவர்களுக்கு தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் பேனா, பென்சில், நோட்டுகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்,

தமிழகத்தில் பா.ஜ.க-வின் தூதுவராகச் செயல்படுகிறார் கிருஷ்ணசாமி : தென்காசி எம்.பி விமர்சனம்!

மத்திய அரசு தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சித்தால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் போராடுவோம் எனத் தெரிவித்தார். தமிழகத்தில் இந்தி மொழிக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரித்துள்ளது குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பா.ஜ.க-வின் தூதுவராக செயல்படுவதாகவும், பா.ஜ.க கூறும் அனைத்திற்கும் ஜால்ரா அடிப்பதாகவும் கிருஷ்ணசாமியை கடுமையாக விமர்சித்தார்.

banner

Related Stories

Related Stories