அரசியல்

சமூகத்துக்கு ஒன்று என்ற வீதம் 5 துணை முதலமைச்சர்கள்- அசத்தும் ஜெகன்மோகன் ரெட்டி!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Venkatesh R S
Updated on

பெரும் வெற்றியுடன் ஆந்திராவில் ஆட்சியை பிடித்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி, பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக ஆந்திரமாநிலத்துக்கு 5 துணை முதலமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் அனைத்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவை அறிவித்தார் ஜெகன்.

எஸ்.சி, எஸ்.டி, பி.சி, சிறுபான்மையினர் மற்றும் காப்பு சமூகம், என 5 சமூகத்தின் பிரதிநிதிகளாக 5 துணை முதல்வர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர்.

மேலும், தனது அமைச்சரவையில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட இருப்பதாகவும் முதலமைச்சர் ஜெகன் தெரிவித்துள்ளார். மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

வரும் சனிக்கிழமை ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான 25 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்கிறது.

banner

Related Stories

Related Stories