அரசியல்

தேர்தல் வியூக நிபுணரைச் சந்தித்த மம்தா : விட்டதைப் பிடிக்க ஆயத்தம்!?

பிரபல தேர்தல் வியூக நிபுணரும், மோடி, நிதிஷ்குமார், ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரின் வெற்றியின் பின்னணியில் செயல்பட்டவருமான பிரசாந்த் கிஷோரை சந்தித்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

தேர்தல் வியூக நிபுணரைச் சந்தித்த மம்தா : விட்டதைப் பிடிக்க ஆயத்தம்!?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பிரபல தேர்தல் வியூக நிபுணரும், மோடி, நிதிஷ்குமார், ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் ஆட்சிக் கட்டிலில் அமர்வதில் பெரும்பங்காற்றியவருமான பிரசாந்த் கிஷோரை சந்தித்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ.க 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே வென்ற பா.ஜ.க இந்த முறை மேற்கு வங்கத்தில் தனது அடித்தளத்தை வலுவாக ஊன்றியுள்ளது.

மொத்தமுள்ள 42 மக்களவை தொகுதிகளில் 22 தொகுதிகளில் மட்டுமே திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இது முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த தேர்தலில் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை இன்று சந்தித்துள்ளார் மம்தா பானர்ஜி. பிரசாந்த் கிஷோர் 2014-ல் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க-வின் வெற்றிக்கும், நடந்து முடிந்த தேர்தலில் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக திகழ்ந்தவர்.

பீகார் சட்டசபைத் தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்காக பணியாற்றிய பிரசாந்த் அங்கும் வெற்றியை தேடிக் கொடுத்தார். பின்னர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் பிரசாந்த்.

தேர்தல் வியூக நிபுணரைச் சந்தித்த மம்தா : விட்டதைப் பிடிக்க ஆயத்தம்!?

ஜெகன்மோகன் ரெட்டியை தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறச்செய்து முதல்வராக்கிய பிரசாந்த் கிஷோரை தற்போது மம்தா பானர்ஜி சந்தித்திருப்பதற்குக் காரணம், தனது கட்சியை மீண்டும் வலுப்படுத்திக் கொள்வதற்காகத்தான் எனக் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories