அரசியல்

பா.ஜ.க அரசின் உண்மையான முகம் தெரியத் தொடங்கிவிட்டது - ப.சிதம்பரம் கருத்து !

மும்மொழித் திட்டத்தை அறிவித்திருப்பதன் மூலம் பா.ஜ.க அரசின் உண்மையான முகம் தெரியத் தொடங்கிவிட்டது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய அமைச்சர்)
ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய அமைச்சர்)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மத்திய அரசுக்கு கஸ்தூரி ரங்கன் குழு புதிய கல்விக் கொள்கையை பரிந்துரைத்துள்ளது. அதில் அனைத்து மாநிலங்களும் தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் இந்த கல்விக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மும்மொழி கொள்கையை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "பா.ஜ.க அரசின் உண்மையான முகம் தெரியத் தொடங்கிவிட்டது. புதிய கல்விக் கொள்கையில் பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்தே மும்மொழித் திட்டம் என்று அறிவித்திருக்கிறார்கள். பள்ளிகளில் மும்மொழித் திட்டம் என்றால் என்ன அர்த்தம்? இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்குவார்கள் என்று பொருள். இந்தி மொழி கட்டாயப் பாடம் என்றால் இந்தி திணிப்பு என்று பொருள் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பா.ஜ.க தேர்தல் அறிக்கையிலேயே இந்தி திணிப்புக்கு கொடி அசைத்திருந்தார்கள் என்பதை நான் தேர்தலின் போதே சுட்டிக் காட்டியிருந்தேன். சமஸ்கிருத மொழியைப் பரப்புவோம் என்று பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. இந்த முயற்சிக்கு தேர்தல் அறிக்கை சூட்டிய தலைப்பு - பாரதிய மொழிக் கலாச்சாரம்!" என்று பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories