அரசியல்

20 ஆண்டுகளில் முதன் முறையாக அமைச்சர் பதவி பெறாத தமிழகம் : அ.தி.மு.க உட்கட்சி பூசலே காரணம்

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் ஒரு பகுதியாக இல்லாதது, இதுவே முதல் தடவையாகும்.

20 ஆண்டுகளில் முதன் முறையாக அமைச்சர் பதவி பெறாத தமிழகம் : அ.தி.மு.க உட்கட்சி பூசலே காரணம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மக்களவைத் தேர்தல் 303 இடங்களில் வெற்றி பெற்று, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டது.

ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என செய்திகள் வெளிவந்த நிலையில், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இருவருக்கும் இடையே அமைச்சர் பதவி யாருக்கு என்கிற பூசலே பதவி கிடைக்காததற்குக் காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பன்னீர்செல்வம் தனது மகனுக்கு எப்படியாவது அமைச்சர் பதவி வாங்க கடினமாக முயற்சி செய்தபோது, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரது விசுவாசியும், மூத்த ராஜ்ய சபை உறுப்பினருமான ஆர்.வைத்தியலிங்கத்திற்கு அமைச்சர் பதவி வாங்க

மத்திய அமைச்சரவையில் அதிமுக உறுப்பினர்களில் யாரேனும் இடம் பெறுவர் என்ற நம்பிக்கையுடன் இருந்த அதிமுக ஏமாற்றம் அடைந்ததாக தோன்றுகிறது. தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் ஒரு பகுதியாக இல்லாதது, இதுவே முதல் தடவையாகும்.

2014-2019 அமைச்சரவையில் பா.ஜ.க.வின் பொன்.ராதாகிருஷ்ணன் நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சராக இருந்தார். 1999, 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தது. அதேபோல் 1998-ல் வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கத்துடன் கூட்டணியில் இருந்தபோது அ.தி.மு.க அமைச்சரவையில் பங்கு வகித்தது.

அதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெறாத ஒரே கட்சி அ.தி.மு.க மட்டுமே. மற்றவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு இணை அமைச்சர் பதவியாவது கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும், பா.ஜ.க ஒரு சீட் கூட வெற்றி பெறாத கேரளாவில் இருந்து கூட ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories